ரஞ்சிக் கோப்பை 2024 தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் குரூப் டி பிரிவில் இடம்பெற்றிருக்கும் தமிழ்நாடு அணி தனது முதல் போட்டியில் சௌராஷ்டிரா அணிக்கு எதிராக விளையாடியது. இதில் 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதையடுத்து தமிழ்நாடு அணி தற்போது டெல்லிக்கு எதிராக விளையாடி வருகின்றது.
டெல்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணி முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கின்றது. இந்நிலையில் ஓப்பனர்களாக களம் இறங்கிய சாய் சுதர்சன் மற்றும் நாராயண் ஜெகதீசன் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஜெகதீசன் 101 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.
இருப்பினும் சாய் சுதர்சன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 274 பந்துகளில் 25 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 213 ரன்களை குவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கின்றார். அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 124 ரன்கள் எடுத்திருக்கின்றார். தமிழ்நாடு அணியின் முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றது. தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தான் ஓப்பனராக களமிறங்கி வருகின்றார்.
அவர் விளையாடாத சூழலில் அவருக்கு பதில் ஓபனரை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கின்றது. அடுத்த வருடம் பிப்ரவரியில் சாம்பியன் டிராபி, ஜூன் உலக டெஸ்ட் சாம்பியன் தொடர் முடிந்த பிறகு ரோகித் சர்மா ஓய்வு பெற்று வருவார். அதற்கு பின் அவருக்கு மாற்றாக புது ஓப்பனரை கட்டாயம் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இந்நிலையில் தான் சாய் சுதர்சன் ரோஹித் சர்மாவுக்கு பதில் ஓபனராக இருப்பார் என்று பிசிசிஐ நினைத்திருக்கின்றது.
இடது கை பேட்ஸ்மனான சாய் சுதர்சன் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி வருகின்றார். 23 வயதாகும் இவர் உள்ளூரில் நடைபெறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஐபிஎல்லிலும் கூட 25 போட்டிகளில் விளையாடி 140 ஸ்ட்ரைக் ரேட் 47 சராசரி ரன்களை குவித்து இருக்கின்றார்.
இதனால் ரோஹித்க்கு பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் பார்மெட்டில் ரோஹித் இடத்தை சாய் சுதர்சன் பிடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் எப்போதும் திறமைக்கு முழு அங்கீகாரம் வழங்கக் கூடியவர். அவர் சாய் சுதர்சனக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்குவார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…