Connect with us

Cricket

அதே நாடு…மைதானமும்…டீமும் தான் வேற…நாளை துவங்கும் முதல் பலப்பரீட்சை!…

Published

on

Indian Team

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் பெண்கள் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடரிலிருந்து சாம்பியன் பட்டம் வெல்லும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி வெளியேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தகுதி சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்ததுமே இந்திய அணியின் அரை இறுதி கனவு கிட்டத் தட்ட நொருங்கியது.

பாகிஸ்தானை க்ரூப் – ‘ஏ’க்கான தகுதிச் சுற்று போட்டியில் நியூஸிலாந்து எளிதில் வென்றாதால், இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறியுள்ளது. இந்திய அணியின் அரை இறுதி ஆசையை கலைத்து விட்டது நியூஸிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி.

இந்நிலையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது டிம் லாத்தம் தலைமயிலான நியூஸிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி.

New zealand

New zealand

கடந்த முறை இந்திய அணியின் டெஸ்ட் சாம்பியன் ஷிப் கனவு பறிபோக முக்கிய காரணமாக அமைந்தது இந்த அணியுடன் இந்தியா மோதிய தொடர். அதே போல இப்போதும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நிலையில் இருந்து வருகிறது.

சர்வதேச டெஸ்ட் அணிகளின் ஐசிசி தர வரிசையில் இரண்டாம் இடத்தில் தற்போது இந்திய அணியும், முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் இருந்து வருகிறது. இதே நிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் இந்த இரு அணிகளும் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மோதும், ஆனால் நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் துவங்க இருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியிலிருந்து இந்திய அணிக்கு நெருக்கடி துவங்கும் நிலை இருந்து வருகிறது.

இந்த தொடருக்கு பின் பார்டர் – கவாஸ்கர் டிராபியில் விளையாட ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது இந்திய அணி. கடந்த இரு முறை ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது வெற்றியை ருசி பார்த்து வந்தது இந்திய அணி. அதே போல் இம்முறையும் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழத்துவங்கியுள்ளது.

இதனிடையே நாளை துவங்க இருக்கும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்டுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் இம்மாதம் இருபதாம் தேதி வரையில் பெங்களூருவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் இருபத்தி நாலாம் தேதி முதல் இருபத்தி எட்டாம் தேதி வரையில் பூனேவிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி துவங்கி ஐந்தாம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

 

google news