சாம்சன் சதம்…விக்கெட் கீப்பர்களுக்கிடையே கடும் போட்டி…இஷான் கிஷான் இனி?…

இந்திய விக்கெட் கீப்பர்களிலேயே சர்வதேச இருபது ஓவர் போட்களில் சதமடித்த முதன் முதல் நபராக மாறிவிட்டார் சஞ்சு சாம்சன்.நேற்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அவர் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டம், இந்திய அணியில் இனி விக்கெட் கீப்பர்களுக்கு இடையே அணியில் இடம் பிடிக்க கடும் நிலவுமா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே
பார்க்கப்படுகிறது.

பல போராட்டங்களுக்கு பிறகே சஞ்சு இந்த சாதனையை செய்துள்ளார், அவரது இந்த அதிரடி ஆட்டம் இந்திய கிரிக்கெட் ரசிகர்ளை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா – பங்களாதேஷ் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று
ஹைதராபாத்தில் வைத்து நடந்து முடிந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா இருபது ஓவர்களில் இருனூற்றி தொன்னூற்றி ஏழு ரன்களை குவித்து வங்கதேசத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் எழுபத்தி ஐந்து ரன்களை குவித்தார், ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா நாற்பத்தி ஏழு ரன்களும், ரியான் பராக் முப்பத்தி நான்கு ரன்களும் குவித்தனர். வங்கதேச அணியின் தன்சிம் ஹசன் சாஹிப் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.

துவக்க வீரராக களமிறங்கிய இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் விஸ்வரூபம் எடுத்தார்.
வெறும் நாற்பத்தி ஏழு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு நூற்றி பதினோறு ரன்களை எடுத்தார். அதில்
பதினோறு  ஃபோர்களும், எட்டு சிக்ஸர்களும் அடங்கும்.

ஒரு நேரத்தில் கிரண் மோரே, நயன் மோங்கயாவிற்கு
பிறகு எத்தனை விக்கெட் கீப்பர்கள் வந்திருந்தாலும் அவர்களது பேட்டிங் திறன் கேள்விக்குறியாகவே
இருந்து வந்தது. சமீர் டீகே, செய்யது சாபா கரீம் இவர்கள் கீப்பிங்கில் சிறந்து விளங்கினாலும் பேட்டிங்கில்
பெரிதாக சோபிக்கவில்லை.

பார்தீவ் பட்டேல், தினேஷ் கார்த்திக் இவர்களது பேட்டிங் ஆரம்பகாலத்தில் நன்றாக இருந்தாலும் நாட்கள்
செல்லச்செல்ல அவர்களும் சோடை போய் விட்டனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாமல் இந்திய அணி
ராகுல் டிராவிட்டை வைத்தே கீப்பிங் செய்து உலகக் கோப்பை  தொடரை எதிர்கொண்டது.

அதன் பிறகே இந்திய அணிக்கு வரப்பிரசாதமாக வந்து சேர்ந்தார் மஹேந்திர சிங் தோனி. கீப்பர், அதிரடி பேட்ஸ்மேன் என்பதனையும் தாண்டி இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார்.

ரிஷப்பன்டின் வருகை தோனியின் இழப்பை ஓரளவு ஈடுகட்டியது. ஆஸ்திரேலிய மண்ணில்
அவர் விளையாடிய இன்னிங்ஸ் அவரது கேரியரையே திருப்பி போட்டது.

அவருக்கு ஏற்பட்ட காயத்தினாலும், கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக கூடுதல் பணியை மேற்கொண்டார்.

Kishan Jurel

இவர்களுக்கு இடையே இடது கை
பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் தனது அறிமுகத்தை கொடுத்தார் இஷான் கிஷான். இந்தியாவிற்கு ஒரு ஆடம் கில்கிறிஸ்ட் கிடைத்து விட்டார் என்பது போலவே தான் இருந்தது இவரது ஆரம்ப நாட்கள்.

அணிக்கு வந்த சில நாட்களிலேயே தனது இரட்டை சதத்தை ஒரு நாள் போட்டிகளில் அடித்தார். பிஹாரை
சேர்ந்த இவர் நாளடைவில் தனது பேட்டிங்கில் இருந்து வந்த சுறுசுறுப்பை இழந்தார்.  துரூவ் ஜுரேல் இவர் ஐபிஎல்
போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியதால் இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வானார். ஜித்தேஷ் சர்மா
இவருக் விக்கெட் கீப்பராக அடிக்கடி தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.

ஒரு காலத்தில் நன்கு பேட்டிங் ஆடத்தெரிந்த விக்கெட் கீப்பர் கிடைப்பாரா? என்ற ஏக்கம் இருந்து வந்தது. ஆனால் இப்போதோ தேர்வு பட்டியலில் இருக்கும் விக்கெட் கீப்பர்களை கொண்டே பதினோறு வீரர்களை அனுப்பலாம் என்ற நிலை வந்துள்ளது.

சஞ்சு சாம்சனின் நேற்றைய அதிரடி ஆட்டத்திற்கு பிறகு இனி இந்திய அணியில் விக்கெட் கீப்பராக நீடிக்க
வேண்டும் என்றால் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆக வேண்டும் என்ற கட்டாயமும்
எழுந்துள்ளது. அணிக்கு விக்கெட் கீப்பர் தேர்வில் இனி போட்டா போட்டி நிலவும் என்பதில் மாற்றுக்கருத்தும்
பலருக்கு இருக்காது.

sankar sundar

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago