வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியது குறித்து சஞ்சு சாம்சன் உருக்கமாக பேசியிருக்கின்றார்.
இந்தியா-வங்கதேசம் இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாக அதிகபட்ச ஸ்கோர் 297 அடிக்க சஞ்சு சம்சனின் அதிரடி ஆட்டம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இந்த போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடினார்.
47 பந்துகளில் 116 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுன்ரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும். இந்த போட்டி முடிந்த பிறகு சஞ்சு சாம்சன் உருக்கமாக பேசியிருந்தார். அவர் அதில் தெரிவித்திருந்ததாவது ‘நான் நன்றாக ஆடியதால் அணியினர் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அங்கு என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்வது வெறுப்பாக இருக்கும்.
ஆனால் என்னால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்பதை நான் உணர்வேன். அதிக போட்டிகளில் விளையாடும் போது அழுத்தங்கள் மற்றும் தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று எனக்கு தெரியும். ஏனென்றால் நான் பலமுறை தோற்று இருக்கின்றேன். சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதை புரிந்து கொண்டு செய்ய வேண்டிய விஷயத்தில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டிற்காக விளையாடும்போது அழுத்தம் நிச்சயமாக இருக்கும். ஆனால் ஆடி நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக செயல்முறையை எளிமையாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு பந்தையும் எதிர்கொண்டேன். என்ன ஆனாலும் எனக்கு ஆதரவளிப்பதாக தலைமை கூறியது. அது வெரும் வார்த்தையாக மட்டுமல்லாமல் செயல்களிலும் இருந்தது. கடந்த சீரியஸில் இரண்டு முறை டக்அவுட் ஆகி அடுத்து என்ன என்ற கேள்வியுடன் கேரளா சென்றேன். தற்போது நான் இங்கு இருக்கின்றேன்’ என்று அவர் பேசி இருக்கின்றார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…