2004 ஆம் ஆண்டு முல்தானில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி இந்திய ரசிகர்கள் மறக்க முடியாத டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த போட்டியில் விரேந்திர சேவாக் 309 ரன்களை விளாசி அசத்தினார். மேலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை முச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையை விரேந்திர சேவாக் பெற்றிருந்தார்.
இது ஒருபுறம் இருக்க இந்த டெஸ்ட் போட்டி சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 675/5 ஸ்கோர் அடித்திருந்தது. இந்தியா சார்பில் சச்சின் டெண்டுல்கர் 194 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சூழலில் அப்போதைய இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இந்த முடிவு இந்திய அணியால் எடுக்கப்பட்டது ஆகும்.
ஆறு ரன்களில் இரட்டை சதத்தை அடிக்க முடியாமல் போன சச்சின் டெண்டுல்கர் இந்த போட்டியில் கடும் ஏமாற்றத்தை எதிர்கொண்டார். இந்த இன்னிங்ஸில் டிக்ளேர் செய்வது தொடர்பான ஆலோசனை நடைபெற்ற இந்திய அணியின் டிரெசிங் ரூமில் ஆகாஷ் சோப்ரா இடம்பெற்று இருந்தார். அப்போது அங்கு என்ன தான் நடந்தது என்பதை ஆகாஷ் சோப்ரா யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்தார்.
“நான் டிரெசிங் ரூமில் இருந்தேன், ஆனால் அந்த உரையாடலில் நான் பங்கேற்கவில்லை. உண்மையில், நான் அதற்கு முயற்சியும் செய்யவில்லை. நான் அப்போது மிகவும் இளம் வயதில் இருந்தேன். பாஜி அன்றைய தினம் மகிழ்ச்சியாக இல்லை. முதல்முறை அவரை மகிழிச்சியின்றி பார்த்தேன். அவர் தனது நிதானத்தை இழந்து நான் பார்த்ததே இல்லை, அன்றும் கூட அவர் தனது நிதானத்தை இழக்கவே இல்லை. ஆனால் அவர் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ஏதோ சரியாக இல்லை.”
“டிக்ளேர் செய்வது பற்றி ராகுல் தான் உரையாடலை தொடங்கினார், ஆனால் அந்த உரையாடலின் போது கங்குலியும் டிரெசிங் ரூமில் இருந்தார். அவர் அந்த போட்டியில் விளையாடவில்லை. ஆனால் அவர் முடிவு எடுக்கும் குழுவில் இடம்பெற்று இருந்தார். ஆனால், அது கேப்டனின் முடிவு மட்டும் இல்லை,” என்று தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…