இனி நம்ம வங்கி ஸ்டேட்மெண்டை வாட்ஸ் ஆப்பிலேயே பெறலாம்..எஸ்பிஐ வங்கியின் புதிய வசதி..

வாட்ஸ் ஆப் பேங்கிங் என்பது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வசதியாகும். இதில் நாம் வங்கி சம்பந்தமான தகவல்களையோ அல்லது வங்கி சம்பத்தமான வசதிகளையோ பெறலாம். மேலும் இந்த வசதியின் மூலம் நாம் வங்கி கணக்கில் உள்ள தொகை மற்றும் நமது அக்கெளண்ட் ஸ்டேட்மெண்ட் என  அனைத்து வசதிகளையும் பெற முடியும்.

தற்போது பாரத ஸ்டேட் வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ் ஆப் பேங்கிங் எனும் ஒரு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி  நமது வங்கி கணக்கினை இனி நாம் நமது வாட்ஸ் ஆப் மூலமாகவே இயக்கி கொள்ள முடியும். மேலும் இதன் மூலம் நாம் மினி ஸ்டேட்மெண்ட், பென்ஷன் ஸ்லிப் சர்வீஸ், வங்கி கடன் பற்றிய தகவல்கள், RD FD போன்ற கணக்குகளை தொடங்குதல், டிஜிட்டல் பாங்கிங், டெபிட் கார்டு பற்றிய தகவல்கள், டெபிட்/கிரெடிட் கார்டிகள் தொலைந்தால் அதனை பற்றிய புகாரிகள் மற்றும் விளக்கங்கள் மற்றும் அருகிலுள்ள ATM-கள் என அனைத்து தகவல்களையும் பெற முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை எவ்வாறு பதிவு செய்வது:

இந்த வசதியினை பெற விரும்புவோர் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து “WAREG ACCOUNT NUMBER”  என்ற குறுஞ்செய்தியை ”+917208933148” என்ற எண்ணிற்கு அனுப்பவும். உதாரணமாக நமது கணக்கின் எண் 234567 என்றால் “WAREG 234567” என்ற செய்தியை ”+917208933148” என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

கவனிக்க வேண்டியவை:

  • வாட் ஆப் வங்கிக்கு பதிவு செய்த பின் அதனை உறுதிபடுத்த நமது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு செய்தியானது அனுப்பப்படும்.
  • மேலும் +919022690226  என்ற எண்ணிற்கு hi என மெசேஜ் செய்து எஸ்பிஐ வங்கியின் chatbot-உடன் கூட உரையாடிக்கொள்ளலாம்.
amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago