Categories: latest newstamilnadu

அடிச்சி தூக்குது ஆடிக்காத்து…வண்டிய மூவ் பண்ணலாமா குற்றாலத்த பாத்து?…

குற்றாலம் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களில்  ஒன்று. “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” என்பது பழமொழி அதே போலத் தான் சீசன் நிரம்பி வழியும் போது தான் குற்றாலத்தின் முழுமையான இதத்தை அனுபவிக்க முடியும். தமிழுக்கு வைகாசி மாத இறுதியில் துவங்கி விடும் பொதுவாக சீசன்,  ஆனி மாதத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து ஆடி மாதத்தில் உச்சம் பெற்று விடும்.

இந்த மாதங்கள் தான் தென் மேற்கு பருவ மழைக்கான காலமாக கணக்கிடப்படுகிறது. கேரளா மற்றும் குற்றாலத்தின் மலைப்பகுதிகளில் பெய்யும் மழையானது அருவிகளுக்கு நீர் வரத்தை வரவழைக்கிறது. ஆடி மாத காற்றும் குற்றால அருவிகளில் விழும் நீரை சாரலாக மாற்றி அங்குள்ளவர்களின் உடலை நனைய வைத்து விடுகிறது.

Falls File Picture

ஆடி மாதக்காற்றின் வேகத்தால் சாரல் கடக்கும் தூரமும் அதிகரிக்கும், இப்படி இயற்கை எழில் கொஞ்சும் பேரழகோடு காட்சியளிக்கும் குற்றாலத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இயல்பு நிலை திரும்பியதால் தடை நீக்கப்பட்டது. இன்று காலை பதினோரு மணி நிலவரப்படி குற்றாலத்தின் பிரதான அருவிகளான பழைய குற்றாலம், ஃபைவ் ஃபால்ஸ், மெயின் அருவியில் குளித்து மகிழ ஏதுவான நிலையே இருந்து வருகிறது.

காற்றின் வேகமும் அதிகமாகவே காணப்பட்டது. நேற்று போல இல்லாமல் இன்று வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. வார வேலை நாட்களில் எப்போதும் காணப்படும் கூட்டத்தின் அளவே இன்றும் காணப்பட்டது. சாரலும் அவ்வப்போடு விழுந்து தனது பணியை சரியாகச் செய்தது. மொத்தத்தில் அதிக நேரம் குளித்து குற்றாலத்தின் சீசனை முழுமையாக அனுபவித்து மகிழ நினைப்பவர்களுக்கு ஏதுவான நாள் இன்று.

sankar sundar

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago