latest news
பத்து பொருத்தமும் பக்காவா பொருந்திருக்கு…குற்றாலம் இன்னைக்கு குதூகலம் தான்…
குற்றாலம் சீசன் நேரத்தில் மட்டுமே அதிகாமாக ஆட்கள் நடமாட்டம் இருக்கக்கூட்டிய சுற்றுலாத் தளம். மே மாத இறுதியில் இங்கே சீசனுக்கான் அறிகுறிகள் தென்படத்துவங்கும். ஜுன் மாதத்தில் சீசன் அதிகரித்து உச்சகட்டத்தை நோக்கி சென்று ஜூலை மாதம் வரை நீடித்து அதன் பின்னர் படிப்படியாக குறைந்து விடும். அதன் பின்னர் மழை காலங்களில் மட்டுமே பாறைகளின் இருக்குகளில் தண்ணீர் மீண்டும் விழத்துவங்கும்.
இந்த வாரத்துவக்கத்திலிருந்தே குற்றாலத்தின் சீசன் உச்சகட்டத்தை அடைந்துள்ளது என்றே சொல்லாலாம். சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்னது போல தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து குற்றாலத்தின் மலைப்பகுதிகளில் பெய்து வந்த மழையினால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குளித்து கும்மாளம் போட இங்கே வந்தவர்களுக்கு ஒரு சில நாள் அதிர்ச்சியே காத்திருந்தது.
அபாய எல்கைகளை தாண்டி தண்ணீர் விழுந்ததனால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இயல்பு நிலை திரும்பியதும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகளுக்கு ஆறுதலைத் தந்தது.
இன்று காலைய நிலவரத்தின் பதினோரு மணி நிலவரத்தின்படி குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் இயல்பு நிலையில் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மலை பகுதிகளின் சுற்று வட்டாரத்தில் குளு, குளு தென்றல் காற்றும் வீசி வருகிறது. சிலு, சிலு சாரல் மழை சில நேரங்களில் விழுந்து குற்றாலத்தின் இன்றைய ரம்மியமான நிலையை அதிகரிக்கச்செய்கிறது.
வாரத்தின் வேலை நாட்களில் குற்றாலத்தில் இருக்கும் கூட்டத்தின் அதே அளவு தான் இன்றும் தென்பட்டது. இன்றைய தினத்தில் குற்றாலம் செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு உகந்த நாளாகத் தான் இன்று காலை பதினோரு மணி நிலவரம் இருந்து வந்தது.