இடைநிலை ஆசிரியருக்கான தேர்வு தொடர்பான விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஹால் டிக்கெட் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அதன்படி ஜூன் 23ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்வானது ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இவர்கள் மட்டுமே நேரடியாக டிஆர்பி தேர்வு எழுத முடியும். மற்றவர்கள் எழுத முடியாது. இடையில் 2024 மக்களவை தேர்தல் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற ஜூலை 21ஆம் தேதி இந்த தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.
இந்த தேர்வுக்கு 26 ஆயிரத்து 510 பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் தேர்வு நெருங்குவதால் விண்ணப்பித்தவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றார்கள். தற்போது ஹால் டிக்கெட் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கின்றது. அதன்படி தற்போது விண்ணப்பித்திருந்த நபர்கள் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஹால் டிக்கெட்டுகளை www.trb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…