சர்வதேச கிரிக்கெட்டில் 14 ஆண்டுகள் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் விரேந்திர சேவாக். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை எப்படி விளையாட வேண்டும் என்ற போக்கையே மாற்றிக்காட்டிய பெருமை இவரை சேரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவிப்பது இவருக்கு கை வந்த கலை எனலாம்.
மேலும் டெஸ்ட் போட்டியை, டி20 போட்டி போன்று விளையாடுவதிலும் விரேந்திர சேவக் பிரபலமாக அறியப்படுகிறார். இந்திய அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளை விளையாடி இருக்கும் விரேந்திர சேவாக், 49.34 சராசரியுடன், மொத்தத்தில் 8 ஆயிரத்து 586 ரன்களை குவித்துள்ளார். இதில் இரண்டு முறை 300-ரன்களுக்கும் அதிகமாக சேர்த்து இருக்கிறார்.
கிரிக்கெட் அரங்கில் அதிரடி ஆட்டக்காரராக அறியப்படும் சேவாக் விக்கெட் எடுப்பது மிகவும் சுலபமான காரியம் தான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நவேத் அல் ஹாசன் தெரிவித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ராகுல் டிராவிட் விக்கெட்டை எடுப்பது மிகவும் கடினமான காரியம் என்று ஒப்புக் கொண்டுள்ளார்,
நடிர் அலியின் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய நவேத் அல் ஹாசன், “சேவாக் விக்கெட்டை எடுப்பது மிகவும் எளிமையான காரியம் தான், ஆனால் ராகுல் டிராவிட்-க்கு பந்து வீசுவது சுலபலமான காரியம் கிடையாது,” என்று தெரிவித்து இருக்கிறார்.
251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் சேவாக், 35.05 சராசரியுடன் ஒட்டு மொத்தமாக 8 ஆயிரத்து 271 ரன்களை குவித்துள்ளார். இதில் 15 சதங்களும், 38 அரை சதங்களும் அடங்கும். இவரின் கடைசி ஒருநாள் போட்டி, ஜனவரி 2013-இல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்றது.
டி20 போட்டிகளை பொருத்தவரை விரேந்திர சேவாக் 19 போட்டிகளில் விளையாடி 394 ரன்களை குவித்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும். மகேந்திர சிங் டோனியின் தலைமையில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இரண்டு முறை விரேந்திர சேவாக் இடம்பிடித்துள்ளார். இவை 2007 உலக கோப்பை தொடர் மற்றும் டி20 உலக கோப்பை தொடர் ஆகும்.
நவேத் அல் ஹாசன் 74 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 29.28 சராசரியுடன் 110 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதில் பெரும்பாலான விக்கெட்கள் இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது டெஸ்ட் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் அல் ஹாசன் ஒட்டு மொத்தமாக 23 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…