நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாய்க்கொழுப்புடன் பேசி வருகிறார்; அவரின் வாய்க்கொழுப்பு அடக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எச்சரித்திருக்கிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன், திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை அவதூறாகப் பேசியதாக போலீஸ் வழக்குப் பதிந்தது.
இதில், கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க மறுத்து திருச்சி நீதிமன்றம் விடுதலை செய்தது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், சாட்டை துரைமுருகன் பாடிய அதே பாடலைப் பாடிக் காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து தற்போது அமைச்சர் சேகர்பாபு பேசியிருக்கிறார். சென்னை குத்தம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், `காய்த்த மரம்தான் கல்லடி படும். சீமான் தொடர்ந்து வாய்க்கொழுப்பெடுத்து பேசி வருகிறார். அவருடைய உயரம் அவருக்கே தெரியவில்லை. அவர் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிந்து கொண்டிருக்கிறார். தி.மு.க கற்கோட்டை. திரும்பத் தாக்க வேண்டும் என்று நினைத்தால் அவர் தாங்க மாட்டார்’’ என்றார்.
அதைத் தொடர்ந்து, முடிந்தால் தன்னை கைது செய்து பாருங்கள் என்று சீமான் சவால் விட்டிருக்கிறாரே என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, `சீமான் பேசியது குறித்து கட்சிக்காரர்கள் தவிர்த்து பொதுநல விரும்பிகள் பலர் புகார் சொல்லி வருகிறார்கள். அதில் சட்டப்படி சாத்தியக்கூறுகள் இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். இதே வார்த்தைக்காக அவர் ஏற்கனவே வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
அரசியல் பார்வை தன்னை நோக்கி திரும்ப வேண்டும் என்பதற்காக அதே வார்த்தையை மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார். என்னதான் விழுந்து விழுந்து புரண்டாலும் சரி; அல்லது முட்டிபோட்டுக் கொண்டு தவழ்ந்து வந்தாலும் சரி இந்த திராவிட மாடல் ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது. சீமான் வாய்க்கொழுப்புக்கு மகக்ள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள்’’ என்று தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…