Finance
நோ சேஞ்ச் சொன்ன தங்கம்…விலை உயர்ந்த வெள்ளி…
தங்கத்தின் விலை நாள் தோறும் தொடர்ச்சியாக கண்காணிகப்பட்டு வரப்படுகிறது. தங்கத்தை போலவே தான் வெள்ளியின் விலையும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து காணப்பட்டது, கவலையை அதிகரித்து வந்தது நகைப் பிரியர்களுக்கு. உயர்வு பாதையில் மட்டுமே இனி பயணிக்கத் துவங்கி விடுமோ? என்ற அச்சமும் ஏற்படத் துவங்கியது. ஆனால் இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் காணப்படாதது கூட ஆபரணப் பிரியர்காளுக்கு ஆறுதலை தந்திருக்கிறது. குறையாவிட்டாலும் பரவாயில்லை அதிகரிக்காமல் இருப்பதனால்.
சென்னையில் இருபத்தி இரண்டு கேரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ஏழாயிரத்து முன்னூறு ரூபாய்க்கு (ரூ.7,300/-) விற்கப்பட்டது. ஒரு சவரனின் விலை ஐம்பத்தி எட்டாயிரத்து நானூறு ரூபாயாகவும் (ரூ.58,400/-) இருந்தது.
இந்நிலையில் நேற்று விற்கப்பட்ட அதே விலையில் எந்த வித மாற்றமும் இன்றி இன்றும் விற்கப்பட்டு வருகிறது தங்கம். இன்று சவரன் ஒன்றின் விலை ஐம்பத்தி எட்டாயிரத்து நானூறு (ரூ.58,400/-) ரூபாய்க்கும், கிராம் ஒன்று ஏழாயிரத்து முன்னூறு ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஆனால் வெள்ளியின் விலையில் நேற்றை விட இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று நூற்றி ஒன்பது ரூபாய்க்கு (ரூ.109/-) விற்கப்பட்டது. ஒரு கிலோ பார் வெள்ளியின் நேற்றைய விலை ஒரு லட்சத்து ஒன்பதாயிரமாக (ரூ.1,09,000/-) இருந்தது.
இன்று கிராமிற்கு ஒரு ரூபாய் (ரூ.1/-) உயர்ந்து நூற்றி பத்து ரூபாய்க்கு (ரூ.110/-) விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ஆயிரம் ரூபாய் (ரூ.1,000/-) உயர்ந்து, ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயாக (ரூ.1,10,000/-) உள்ளது.