எங்களையும் மிரட்டினார்கள்… இந்தியாவிற்கு ஆதரவாக இருந்தோம்.. ஆனா அவங்க? வருத்தம் தெரிவித்த சாகித் அப்ரிடி

0
56

பாகிஸ்தானில் நடக்க இருக்கும் சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி பங்கெடுக்குமா என்பது இதுவரை முடிவாகாமல் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாகித் அப்ரிடி இது இந்திய அணியின் சாக்கு தான் என கவலை தெரிவித்து இருக்கிறார்.

2008 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணி இதுவரை பாகிஸ்தான் சென்று எந்த தொடரிலும் கலந்து கொள்ளவில்லை. இரண்டு அணிகளுமே இரு தரப்பு போட்டிகளில் கூட இதுவரை விளையாடாமல் இருக்கிறது. இந்நிலையில்தான் அடுத்த வருடம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடக்க இருக்கிறது.

ஆனால் பிசிசிஐ  தங்களால் பாகிஸ்தான் சென்று விளையாட முடியாது. ஆசிய கோப்பை போட்டிகளை போல இந்திய அணி விளையாட வேண்டிய போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனால் கொழும்புவில் சமீபத்தில் நடந்த ஐசிசி பேச்சு வார்த்தையில் இது குறித்து எதுவும் பேசப்படவில்லை.

இதனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வேண்டும் அல்லது தொடரில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இந்திய அணி வெளியே இருந்தால் அடுத்த இடங்களில் இருக்கும் இலங்கை அல்லது மேற்கிந்திய தீவுகள் தொடருக்குள் வரும். இதனால் இந்திய தரப்பு என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி, இந்தியாவிலிருந்து எங்களுக்கு மிரட்டல் வந்த போதும் நாங்கள் அங்கு சென்றோம். 2016 டி20 உலக கோப்பை, 2023 ஒரு நாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா சென்று கலந்து கொண்டோம்.

நாங்கள் அவர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டோம். இந்திய அணிக்கு என்றுமே ஆதரவாக தான் இருந்திருக்கிறோம். அரசும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் மிரட்டலை அடுத்தும் நாங்கள் இந்தியா செல்ல ஏற்பாடுகளை செய்தனர். அதுப்போல இந்திய அணி நினைத்தால் இங்கு வந்து விளையாட முடியும். அவர்கள் சொல்வதெல்லாம் சாக்கு தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here