துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய வீரர்கள் மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள பயனுள்ள ஒன்றாக மாறி வருகிறது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர்களில் பெரும்பாலானோர் முதற்கட்ட துலீப் கோப்பை தொடரில் விளையாடினர். சிலர் இரண்டாம் கட்ட போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர்.
அந்த வகையில், வங்கதேசம் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறாத காரணத்தால் ஸ்ரேயஸ் அய்யர் இந்தியா டி அணியின் கேப்டனாக துலீப் கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் இடையிலான போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் சொதப்பியது, அவர்மீது விமர்சனங்களை ஈர்த்துள்ளது.
இந்தியா சி அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் முறையே 9 மற்றும் 54 றன்களை மட்டுமே எடுத்தார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் ஏழு பந்துகளை எதிர்கொண்ட அய்யர் ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். ஸ்ரேயஸ் அய்யரின் மோசமான ஆட்டம் குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“ஒரு கிரிக்கெட்டராக அவரை இப்படி பார்க்க வருத்தமாக இருக்கிறது. முன்பக்கமாக அவுட் ஆகின்றீர்கள் என்றால் போதிய கவனம் செலுத்தவில்லை என்றே அர்த்தம். குறிப்பாக சிவப்பு பந்து போட்டிகளில் இப்படியான கவன சிதறல்கள் இருக்கவே கூடாது. உலகக் கோப்பை தொடரில் அவர் இரண்டு சதங்களை விளாசியுள்ளார், மேலும் ஐபிஎல்-இல் அவர் கோப்பையை வென்ற கேப்டனாக இருக்கிறார்.”
“இவற்றை பார்த்த ஒருத்தர் இங்கு குறைந்தபட்சம் 1000-200 ரன்களை அடித்திருக்க வேண்டும். அய்யர் ஒருவிஷயத்தில் ராசிக்காரர் தான். இந்த தொடரில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் இடம்பெறவில்லை. அய்யருக்கு இனியும் சிவப்பு பந்து கிரி்க்கெட்டில் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. அவர் பவுண்டரிகளை அடிக்கவே விரும்புகிறார். அவர் இப்படி நினைக்கக்கூடாது.”
“உலகக் கோப்பையில் இரண்டு சதங்களை விளாசியதால், அவர் தன்னை விராட் கோலி என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. அவரை விரும்பும் இந்திய ரசிகர்கள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் இந்திய தேர்வுக்குழுவில் இருந்தால், நிச்சயம் அவரை துலீப் கோப்பையில் விளையாட தேர்வு செய்திருக்க மாட்டேன். அவர் போட்டிக்கு மரியாதை கொடுக்க மறுக்கிறார்,” என்று பசித் அலி தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…