Categories: Cricketlatest news

சுப்மன் கில் செய்யுற தப்பு இது தான்.. லிஸ்ட் போடும் முன்னாள் இந்திய வீரர்..!

வெஸ்ட் இன்டீஸ் சுற்று பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய அணி, டெஸ்ட் தொடரை தெடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறது. இது மட்டுமின்றி டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இன்டீஸ் மற்றும் இந்தியா அணிகள் மோத இருக்கின்றன. டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை குவிக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வித அணிகளிலும் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விதம், கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் தேர்வு குழுவுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. சமீபத்திய டெஸ்ட் போட்டிகளின் மூன்று இன்னிங்ஸ்-இல் சுப்மன் கில் வெறும் 29 ரன்களையே குவித்து இருக்கிறார்.

Shubman-Gill-WV-Raman

ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில் சராசரி 65.55 ஆகவும், டி20 போட்டிகளில் 40.40 ஆகவும், டெஸ்ட் போட்டிகளில் வெறும் 19 ஆகவே இருக்கிறது. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியிலும் சுப்மன் கில் வெறும் ஏழு ரன்களை அடித்து பெவிலியன் திரும்பினார். இவரது ஆட்டம் ஏன் இப்படி இருக்கிறது, இவர் எங்கு தவறு செய்கிறார் என்று முன்னாள் இந்திய அணி பேட்டர் WV ராமன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது..,

“அவர் பந்து வீச்சுக்கு முன்பே ஷாட் அடிக்க சவுகரியமான பொசிஷனுக்கு மாறுவதை என்னால் பார்க்க முடிகிறது. மேலும் அவர் இதனை வெகு விரைவில் செய்துவிடுகிறார். இவ்வாறு ஆகும் போது சில நாட்கள் அதிக சிறப்பானதாகவும், சில நாட்கள் மிகவும் மோசமாகவும் மாறும். சில நாட்களில் இவ்வாறு செய்வது பவுலிங்கிற்கு ஏற்ப சின்க் ஆகும், அதிக ரன்களை குவிக்க செய்யும். சமயங்களில் இந்த நிலை தலைகீழாக மாறும்.”

Shubman-Gill-WV-Raman-1

“சமீபத்திய பேட்டர்களில் பலரும், பேட்டை வீசுவதற்கு கீழே இருக்கும் கை-இன் பலத்கை பயன்படுத்தி, டவுன் ஸ்விங் செய்கின்றனர். இதுபோன்ற செயல்பாடு அதிக ரன்களை அடிக்க ஒத்துழைக்காது. இவ்வாறு செய்யும் போது பேட் உடல் வழியே செல்லும் என்பதால், பேட்-இன் முகம் மூடப்பட்டு, பேட் பந்தை சந்திக்கும் வாய்ப்பு அதிகளவில் குறைந்துவிடும்,” என்று தெரிவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சுப்மன் கில் மிகவும் ஆக்ரோஷமான பேட்டர்-ஆக உருவெடுத்து இருக்கிறார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களமிறங்கிய சுப்மன் கில் 851 ரன்களை குவித்து அசத்தினார்.

admin

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago