தனியார் நிறுவனங்களில் குரூப் சி மற்றும் டி பிரிவில் கன்னடர்களுக்கு 100% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்த பதிவை கர்நாடக முதல்வர் சித்தராமையா நீக்கியிருக்கிறார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, `குரூப் C மற்றும் குரூப் D பணிகளில் கன்னடர்களுக்கு 100% இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது’ என பதிவிட்டிருந்தார். கன்னடர்களுக்கே 100% வேலைவாய்ப்பு என்கிற சித்தராமையாவின் அறிவிப்பு சர்ச்சையான நிலையில், அந்தப் பதிவை அவர் நீக்கியிருக்கிறார்.
இதுகுறித்து அம்மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களில் 50% நிர்வாக பணிகளிலும், 70% சதவீதம் நிர்வாகம் அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்குத்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்ததாக விளக்கம் அளித்திருக்கிறார்.
மேலும், தகுதியான உள்ளூர் நபர்கள் கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அரசுடன் இணைந்து, உள்ளூர் நபர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் இந்த மசோதா கூறுகிறது. இந்த மசோதாவை நாளை (ஜூலை 18) நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற அம்மாநில அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…