கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹெச்.டி.குமாரசாமி மந்திரியாக உள்ளார். அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பிறகே அவர் ஜாமின் பெற்றார் எனவும் சொல்லியிருக்கிறார்.
மூடா மோசடி தொடர்பாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய கவர்னர் அளித்த உத்தரவு செல்லும் என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து முறைகேடடு தொடர்பாக லோக் ஆயுக்தா விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ராஜினாமா சித்தராமையா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது.
இதெல்லாம் நமது அரசியலை சீர்குலப்பதற்கான அரசியல் வேலை, அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், லோட்டஸ் ஆபரேசனை முயற்சி செய்தார்கள், அது தோல்வி அடைந்தது, ஆட்சி அமைப்பதற்கான எம்.எல்.ஏக்கள் இல்லாமல் இரண்டு முறை ஆட்சி அமைத்தார்கள் எடியூரப்பா வெற்றி பெற்றாரா? என கேட்டிருந்தார்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஹெச்.டி.குமாரசாமி இடம் பிடித்துள்ளார். மந்திரியாக உள்ள அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பிறகே அவர் ஜாமீன் பெற்றிருக்கிறார் என கூறியிருக்கும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தான் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்பதனையும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். மூடா மோசடி தொடர்பான விஷயங்களுக்கு பிறகு கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படத் துவங்கியது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…