Categories: latest newstamilnadu

தமிழ்ல படிக்க ஆசை; சீட் கொடுக்கல… குமுறும் நாகாலாந்து மாணவி!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தனக்கு தமிழ் படிக்கத் தெரிந்தும் தமிழில் படிக்க ஆசைப்பட்டும் பள்ளியில் சீட் கொடுக்க மறுப்பதாக நாகாலாந்து மாணவி பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்.

நாகாலாந்து மாணவி

நாகாலாந்தைச் சேர்ந்த ரூத் என்பவர் சிங்கம்புணரியில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாக ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வந்திருக்கிறார். அவர், தனது இரண்டு மகள்களையும் இங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்க வைத்திருக்கிறார். இந்நிலையில், கொரோனா லாக்டவுன் நேரத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றவர் சமீபத்தில் திரும்ப வந்திருக்கிறார்.

இந்தநிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றில் மூத்த மகள் அக்மாலாவுக்கு பதினொன்றாம் வகுப்பில் சேர அட்மிஷன் கேட்டிருக்கிறார். பள்ளி தரப்பில் கேட்ட உரிய சான்றிதழ்களை அளித்தும் அவர்கள் சீட் கொடுக்காமல் அலைக்கழிப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்மாலா, `அவங்க கேட்ட எல்லா சான்றிதழ்களையும் கொடுத்துட்டோம். ஆனாலும், ஆட்சியர் அலுவலகத்துல கேட்கணும் அது, இதுனு சொல்லி சீட் கொடுக்க மாட்டேங்குறாங்க. எனக்குத் தமிழ் தெரியும். தமிழ்ல படிக்கணும்னு ஆசை. ஒரே ஒரு வாய்ப்புக் கொடுங்க’ என்று நெகிழ்ச்சியாகப் பேசினார். இந்த விவகாரம் குறித்து கல்வித்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

AKHILAN

Recent Posts

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

3 hours ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

3 hours ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

4 hours ago

INDvsBAN டி20 தொடர்.. இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட…

5 hours ago

ஐபிஎல் 2025: வீரர்களுக்கு ஜாக்பாட், ஜெய் ஷா கொடுத்த பயங்கர அப்டேட்..!

ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு…

5 hours ago

ஐபிஎல் 2025: Retention ரூல்ஸ்.. எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்.. முழு விவரங்கள்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது.…

6 hours ago