பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே கிடையாது. பாம்பு கடித்து மனிதர்கள் பலரும் உயிரிழப்பது வழக்கம் தான். பாம்பு கடித்தவர்கள் தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு செல்லும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்திருப்போம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக பீகாரில் ஒரு சம்பவம் ஒன்று நடந்திருக்கின்றது.
பீகாரின் நபாடா மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் லோகர் என்பவர் கூலித்தொழிலாக இருந்து வருகின்றார். இவர் வேலையை முடித்துவிட்டு ரயில் தண்டவாளம் அருகே இருந்த குடிசையில் படித்து கொண்டிருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதை பார்த்த அவர் தன்னை கடித்த பாம்பை திரும்பி கடித்தால் தனது உடலில் இருக்கும் விஷம் ஒன்று செய்யாது என்ற மூடநம்பிக்கையில் இருந்துள்ளார்.
உடனே அந்த பாம்பை பிடித்து மூன்று முறை கடித்துள்ளார். இதில் அந்த விஷப்பாம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது. இதனையடுத்து சந்தோஷ் லோகர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…