தன்னை கடித்த விஷ பாம்புடன் மருத்துவமனைக்கு வந்து அங்கு இருந்தவர்களை அலற விட்டிருக்கின்றார் ஒரு நபர்.
பீகார் மாநிலம் பகல்பூர் என்ற பகுதியை சேர்ந்த நபர் உலகின் மிக விஷ பாம்புகளில் ஒன்று தன்னை கடித்து விட்டது என்று கூறி அந்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்திருக்கின்றார். பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் மண்டல் என்ற நபர் தன்னை கழித்த விஷப்பாம்புவின் வாயை பிடித்து கழுத்தில் சுற்றிக்கொண்டு நேராக மருத்துவமனைக்கு வந்திருக்கின்றார்.
பாம்பு கடித்த நிலையில் அதனை கையில் வைத்துக்கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் நின்று கொண்டிருந்த மருத்துவர்களை பார்த்து தனக்கு சிகிச்சை அளிக்கும்படி கேட்டு இருக்கின்றார். இதை பார்த்த அங்கு இருந்த மருத்துவர்களும் நோயாளிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனனர். காத்திருந்த அந்த நபர் வலி தாங்க முடியாமல் கையில் பாம்பை வைத்துக்கொண்டு அங்கேயே படுத்து விட்டார்.
மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் காட்சியை மக்கள் பலரும் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து வந்திருந்தார்கள். நோயாளிகளின் உதவியாளர்கள் அந்த நபரின் கையில் இருந்த பாம்பு தப்பித்து விட்டால் எதுவும் நடக்கலாம் என்ற பயத்தில் தூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். வளாகத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அங்கிருந்த நபர் பிரகாஷின் கையைப் பிடித்து அவரை ஒதுக்கு புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
மேலும் கையில் பாம்பை வைத்திருக்கும் நபருக்கு எப்படி சிகிச்சை கொடுக்க முடியும் என்று மருத்துவர்கள் குழப்பத்தில் இருந்தார்க.ள் இதை தொடர்ந்து சிகிச்சை தாமதமானதை அடுத்து பிரகாஷிடம் அனைவரும் சொல்லி புரிய வைத்து அந்த பாம்பை விடுவித்துள்ளார்கள். அதன் பிறகு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. இருப்பினும் தற்போது அவரின் நிலை மிகவும் மோசமாகத்தான் இருக்கின்றது. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…