சுயநலத்திறகாக கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுக்கும் இந்த பூமி அடைக்கலம் கொடுத்து வருகிறது. தான் வாழும் வாழ்வினை பிறருக்கு உபயோகமாக வாழ்ந்து முடிக்க நினைப்பவர்களுக்கும் இந்த பூமித்தாய் தன்னுடைய அடைக்கலத்தையும் கொடுத்து வருகிறாள் மக்கள் தொகை எப்படி உயர்ந்து வருகிறதோ, அதே போல இறப்பு சதவீதங்களும் இருந்து தான் வருகிறது.
தங்களது இறப்பை வரலாறாக மாற்ற நினைத்து வாழும் போதே அதற்கான திட்டங்களையும், உழைப்பை போட்டு வரும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மூளைச் செயலிழந்த நிர்மலா என்பவரின் மகன்கள் செய்த காரியம் மனதை உருக வைத்திருக்கிறது.
மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக நிர்மலா பக்க வாத நோயினால் பாதிக்கப்படிருந்த நிலையில் திடீரென மரணமடைந்துள்ளார்.
வாழ்ந்த வந்த நேரத்தில் தன்னை சுற்றி இருப்பவர்களின் நல்வாழ்விற்கான செயல்களை செய்யும் குணம் கொண்டவராம் நிர்மலா. இறந்த பின்னும் தங்களது தாயாரின் இயற் குணம் பிரதிபலிக்க வேண்டும் என்கின்ற உயரிய எண்ணத்தில் நிர்மலாவின் மகன்காளான உமாபதி, சத்யா இருவரும் தங்களது தாயாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர்.
இதற்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு தங்களது தாயாரின் உடலை தானமாக வழங்கியிருக்கின்றனர். தானம் செய்யப்பட்ட உடலிலிருந்து கணையம் எடுக்கப்பட்டு வேறு ஒரு நோயாளிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக நிர்மலாவின் இளைய மகன் சத்யா தெரிவித்திருந்தார். உடல் உறுப்புகளை தானம் செய்து இறந்த தாய்க்கு பயனாளிகள் மூலமாக மறுபிறவி எடுக்க வைத்துள்ள மகன்களின் இந்த செயல் நெகிழச் செய்துள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…