தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து இருக்கும் வன்முறைகளால் தமிழகமெங்கும் இருக்கும் ரவுடிகள் குறித்து பட்டியலை காவல்துறை தயாரிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பட்டியல் தயாரான நிலையில் போலீசார் அவர்களை கண்காணிக்கும் பணியையும் தீவிரப்படுத்தி இருக்கின்றனர். இந்நிலையில், இதுவரை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் உருவாக்கப்பட்டு உள்ளதாம். இதில் குறிப்பிட்ட 400 ரவுடிகளுக்கு மட்டும் ஒரு போலீசார் விதம் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
மேலும், ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர் பட்டியலில் இருக்கும் ரவுடிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட இருக்கின்றனர்.
இதில் எதுவும் பிரச்னை தென்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல சென்னையிலும் ரவுடிகளின் பட்டியல் தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…