latest news
குளுமை என்றாலே நிலா தான்…அப்படி என்ன ஸ்பெஷல் இன்றைக்கு?…
குளுமை என்பதை விவரிக்க எத்தனையோ வடிவங்களும், வார்த்தைகளும் இருந்தாலும் குளிர்ச்சியை பற்றிய பேச்சுக்கள் வரும் போது நிலவை உதரணமாக சொல்லுவதை தவிர்க்க முடியாத ஒன்றாகத் தான் இருந்து வருகிறது.
காதலன், காதலியை கொஞ்சி மகிழும் விதமான பாடல்களோ, காட்சிகளோ சினிமாவில் வைக்கப்பட்டால் அதில் நிலவை பற்றி குறிப்பிடாமல் கடந்து சென்று விடவும் முடியாது. இந்த புவியில் இருக்கும் ஒன்பது கிரகங்களின் நிலவிற்கு என்றுமே தனிச்சிறப்பு உண்டு
பூமியைத் தவிர வேறு எந்த கிரகத்தில் மனித வாழ முடியும், அதற்கான சூழல் எங்கே இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் யோசித்த போது அவர்களின் கவனம் நிலவின் மீது தான் திரும்பியது.
நிலாவில் ஆராய்ச்சி நடத்த பல நாடுகளும் தங்களின் விஞ்ஞான திறன் மற்றும் ஆளுமைகளை வைத்து முயற்சி செய்தும் வருகிறது. நிலாவின் தென் துருவத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்துள்ளது.
1969ம் ஆண்டு நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோரின் பங்களிப்பை போற்றும் விதமாக ஆண்டு தோறும் ஜூலை இருபதாம் தேதி சர்வதேச நிலவு தினமாக கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை இந்த தேதியை சர்வதேச நிலவு தினமாக அறிவித்தது. நிலாவில் மனிதன் முதன்முதலில் இறங்கி கால் பதித்ததை கொண்டாடவும், நிலவை பற்றிய நிலையான ஆய்வு மற்றும் அதன் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை பரப்பவும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
அமாவாசை தினங்களைத் தவிர மற்ற நாட்களில் குளுமையையும், ரசிப்புத்தன்மையை நம்மிடையே தூண்டும் விதாமான நிலாவை சிறப்புப்படுத்தும் தினம் இன்று.