இலங்கை அணிக்கெதிரான 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருப்பதில், டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவில்லை.
இலங்கை செல்லும் இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் காம்பீர் பதவியேற்றபின் நடக்கும் தொடர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்தத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்குப் பதில் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.
டி20 போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிகளில் தடுமாறி வந்தார். இது கடந்த நவம்பரில் இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரின்போது கண்கூடாகத் தெரிந்தது. இதையடுத்தே அவரை ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் தேர்வு செய்யவில்லை என்று தெரிகிறது.
அதேநேரம், ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு அணிகளிலும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒருநாள் போட்டிக்கான அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 2025 சாம்பியன்ஸ் டிராஃபியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.
சஞ்சு சாம்சன் டி20 போட்டிகளுக்கான அணியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் மட்டும் இடம்பிடித்திருக்கிறார்கள். அதேபோல், ரியான் பராக் ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு அணிகளிலும் இடம்பிடித்திருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…