இலங்கை அணிக்கெதிரான தொடரில் இருந்து கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்க பிசிசிஐ திட்டமிட்டிருக்கிறது.
ஜிம்பாப்வே தொடருக்குப் பின் இந்திய அணி இம்மாத இறுதியில் இலங்கை செல்ல இருக்கிறது. ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரைக்கும் நடக்கும் தொடரில் இந்திய அணி தலா 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 உலகக் கோப்பைக்குப் பின்னர் ஓய்வு அறிவித்துவிட்ட்டனர். அதேநேரம், பும்ரா தொடர்ந்து விளையாட இருப்பதாக அறிவித்திருந்தார். இந்தநிலையில், இலங்கை தொடரில் இருந்து இவர்கள் மூவருக்கு ஓய்வளிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
செப்டம்பர் மாதம் வங்கதேச அணியின் சுற்றுப்பயணத்தோடு தொடங்க இருக்கும் ஹோம் சீசனுக்கு அவர்கள் தயாராகும் பொருட்டே இந்த ஓய்வை வழங்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இலங்கை தொடருக்கான வீரர்களைத் தேர்வு செய்ய, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. இலங்கை சீரிஸுக்கு முன்பாக இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்கிற கேள்விக்கும் விடை தெரியவரும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…