விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி மரணமடைந்தார். நடாளுமன்ற தேர்தலுடன் அந்த தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை.
இப்போது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதற்கான வேட்புமணி வருகிற 14ம் தேதி துவங்கவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 21ம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அந்த தொகுதியில் அமுலுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என கணக்குப்போட்ட திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்திருக்கிறார்.
இதில், அமைசர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கிறார்கள். அதிமுகவில் யாரை நியமிப்பது என்பதில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. அதேபோல், இந்த தொகுதியில் போட்டியிடலாமா வேண்டாமா? என பாமகவும் ஆலோசை செய்து வருகிறது.
நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் அதிமுகவே வெற்றி பெற்றிருக்கும் நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும் என கணிக்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…