Connect with us

Cricket

சிஸ்டம் சரியில்லங்க.. தலைவர் ஸ்டைலில் பதில் அளித்து அசத்திய ஸ்டூவர்ட் பிராட்..!

Published

on

Sturat-Broad-Featured-Img

2023 ஆஷஸ் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அறிவித்தார். ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்த அறிவிப்பை ஸ்டூவர்ட் பிராட் வெளியிட்டார். 37 வயதான ஸ்டூவர்ட் பிராட் தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி பந்தில் சிக்சர் அடித்தார்.

மேலும் தனது கடைசி டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் கடைசி செஷனில் இரண்டு விக்கெட்களை கைப்பற்றி இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இதன் மூலம் 2023 ஆஷஸ் தொடர் சமனில் முடிந்தது. தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து இருக்கும் ஸ்டூவர்ட் பிராட் கூறியதாவது..,

Sturat-Broad

Sturat-Broad

“உறக்கத்தில் இருந்து விழித்ததும், விக்கெட்டிற்கு ரசிகர்கள் கொண்டாடும் வீடியோவை பார்த்தேன். அது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. எனக்குள் இருக்கும் உணர்வு, மக்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை பார்த்தேன். பிறகு எனது செல்லப்பிரானி ஆல்ஃபியுடன் என் வீட்டின் அருகில் இருக்கும் பூங்கா ஒன்றிற்கு நடந்து சென்றேன். ஐந்து நிமிடங்கள் நடந்தேன். வழியில், ஹெட்பேன்ட் கட்டப்பட்டு இருப்பதை பார்த்தேன். மேலும் ஜன்னல்களில், ‘உனது பங்களிப்புக்கு நன்றி’ என்று போஸ்டர் வைக்கப்பட்டு இருந்தது. அதனை பார்க்க அருமையாக இருந்தது.”

ஆஷஸ் தொடரில் பந்துவீச்சின் போது அதிக நேரம் எடுத்துக் கொண்டமைக்காக இங்கிலாந்து அணிக்கு 19 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அபராதமாக விதிக்கப்பட்டன. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்து, ஸ்டூவர் பிராட் கூறியதாவது..,

Sturat-Broad-1

Sturat-Broad-1

“உண்மையில் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீதான தரம் மற்றும் முக்கியத்துவத்தை குறைக்கிறது. எல்லா சமயங்களிலும், மிக சிறந்த சீரிசாக இது இருந்து வந்துள்ளது. இங்கிலாந்து அணி 60 புள்ளிகளில் இருந்து ஒன்பது புள்ளிகளில் வருவதை வைத்து பார்க்கும் போது, சிஸ்டம் தவறாக இருக்கிறது, அதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று தெரிவித்தார்.

 

google news