ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின் மூன்றாவது நாள் இறுதியில் ஸ்டூவர்ட் பிராட் தனது ஓய்வு பற்றி அறிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களாக இதுபற்றி யோசனை செய்து வந்தேன். நேற்றிரவு 8.30 மணிக்கு தான் முடிவு செய்தேன். ஆஷஸ் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். நாளை அல்லது திங்கள் கிழமை தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது கடைசி போட்டியாக இருக்கும் என்று ஸ்டூவர்ட் பிராட் அறிவித்து இருந்தார்.
ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு அறிவிப்பை கேட்டு சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளின் போதே, ஸ்டூவர்ட் பிராட் பற்றி ஜேம்ஸ் ஆன்டர்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஸ்டூவர்ட் பிராட் பற்றி பேச நினைக்கும் போது, ஆன்டர்சன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல், கண்ணீர்விட்டு அழ துவங்கிவிட்டார்.
ஜேம்ஸ் ஆன்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் கடந்த பல ஆண்டுகளாக பந்துவீச்சில் கூட்டாளிகளாக இருந்து வந்துள்ளனர். இந்த கூட்டணி மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் ஆயிரத்திற்கும் அதிக விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறது. ஸ்டூவர்ட் பிராட் குறித்து ஜேம்ஸ் ஆன்டர்சன் கூறியதாவது..,
“அவர் எனது நெருங்கிய நண்பர், கடந்த பல ஆண்டுகளாக அவர் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். அவர் பல சமயங்களில் எனக்கு ஆதரவாக இருந்துள்ளார்,” என்று தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…