வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால், நாடு முழுவதும் மொபைல் இணைய சேவையை அரசு முடக்கியிருக்கிறது.
வங்கதேச விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக மொபைல் இணைய சேவையை முடக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.
தலைநகர் டாக்கா உட்பட பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்ததுள்ளன; வன்முறையில் இதுவரை 6 மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது போலீஸார் மற்றும் ராணுவப் படையினர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
போராட்டக்களமாக வங்கதேசம் தகித்து வரும் நிலையில், போராட்டக்காரர்களைத் தேச துரோகிகள் என்று பொருள்படும் வகையில் அந்நாடு பிரதமர் ஷேக் ஹசீனா, `ரஸாக்கர்கள்’ என்று அடையாளப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், நாடு முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்த இருப்பதாக மாணவர் அமைப்புகள் கொந்தளித்திருக்கின்றன.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…