Finance
தள்ளாடும் தங்கம் விலை…ஆபரணப் பிரியர்களுக்கு ஆனந்தம் தானே!..
தங்கத்தின் விலையில் நிறைய மாற்றங்கள் தென்பட்டு வருகிறது சமீபகாலமாக. இந்த மாதத் துவக்கத்திலிருந்தே ஒரு கிராம் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் சென்னை விற்பணை விலையில் அதிக மாற்றங்கள் இருந்து கொண்டே தான் வருகிறது. ஒரு நாள் ஜெட் வேகத்தில் ஏற்றமும், விலை இறக்கத்தில் வேகத்தில் குறைவே என்று இருந்து வந்தது.
தமிழ் மாதமான ஆடியின் துவக்க நாளில் அதிரடி காட்டி கிச்சென உயர்ந்தது தங்கத்தின் விலை. அதனைத் தொடர்ந்து தடாலடியாக குறைந்து இன்ப அதிர்ச்சியை கொடுத்து நகை பிரியர்களுக்கு. இந்நிலையில் நேற்று பட்ஜெட் அறிவிப்பிற்கு முன், பட்ஜெட் அறிவிப்பிற்கு பின் என இரண்டு மாற்றங்களை விலையில் கண்டது ஒரே நாளில் மட்டும். யாருமே எதிர்பாராத அளவிலான குறைவை சந்தித்து தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலை.
இன்று கிராம் ஒன்றிற்கு ரூபாய் அறுபது குறைந்துள்ளது நேற்றைய விலையை ஒப்பிட்டு பார்க்கும் போது (ரூ.60/-). இதனால் இருபத்தி இரண்டு கேரட் ஒரு கிராம் சென்னை ஆபரணத்தங்கத்தின் விலை ஆராயிரத்து நானூற்றி தொன்னூறு ரூபாயாக உள்ளது (ரூ.6490/-). சவரன் ஒன்றுக்கு நானூற்றி என்பது ரூபாய் (ரூ.480/-) குறைந்து, ஐம்பத்தி இரண்டாயிரத்து தொல்லாயிரத்து இருபது ரூபாயாக்கு விற்பனையாகிறது (ரூ.52,920/-).
ஒரு கிராம் வெள்ளியின் விலை ஐம்பது காசுகள் குறைந்து (50 காசுகள்) தொன்னூற்றி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது (ரூ.92/-). ஒரு கிலோ வெள்ளியின் விலையில் ரூபாய் ஐனூறு குறைந்துள்ளது (ரூ.500/-) இதனால் ஓரு கிலோ வெள்ளியின் விலை தொன்னூற்றி இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகியது சென்னையில் இன்று (ரூ. 92000/-).