Connect with us

Finance

நவம்பர் மாதம்…நல்ல துவக்கம்…தங்கம் விலை!…

Published

on

Jewel

தங்கம் அதன் விலை உயர்வால் கவலை அதிகரிக்கச் செய்து வந்து கொண்டிருந்தது. அறுபதாயிரம் ரூபாயை (ரூ.60,000/-) ஒரு சவரனின் விலை எப்போது தொடப் போகிறதோ? என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியும் உள்ளது.

நவம்பர் மாதத்தின் துவக்கம் ஒன்றாம் தேதியான இன்று தங்ககத்தின் விலை சிறிது கருணை காட்டியுள்ளது என நினைக்க வைத்து விட்டது. நேற்று தீபாவளி பண்டிகை அன்று கிராம் ஒன்றின் விலை ஏழாயிரத்து நானூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாயாகவுகம் (ரூ.7,455/-) சவரன் ஒன்றின் விலை ஐம்பத்தி ஐந்தாயிரத்து அறனூற்று நாற்பது ரூபாயாகவும் (ரூ.59,640/-) விற்பனை செய்யப்பட்டது.

இன்று மாதத் துவக்கதிலேயே இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இறங்குமுகத்திற்கு வந்துள்ளது.

Ornament

Ornament

நேற்றை விட இன்று கிராமிற்கு எழுபது ரூபாயும், சவரன் ஒன்றிற்கு ஐனூற்றி அறுபது ரூபாயும் (ரூ.560/-) வீழ்ச்சியை கண்டுள்ளது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குறைவினால் சென்னையின் ஒரு கிராம் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏழாயிரத்து முன்னுற்றி என்பத்தி ஐந்து ரூபாயாகவும் (ரூ.7385/-), ஒரு சவரனின் விலை ஐம்பத்தின் எட்டாயிரத்து என்பது ரூபாயாகவும் (ரூ.59080/-) இருந்து வருகிறது.

இதே போலத் தான் வெள்ளியும் விலை குறைந்து இன்று நிம்மதியை தந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி நூற்றி ஒன்பது ரூபாய்க்கும் (ரூ.109/-), ஒரு கிலோ ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் (ரூ.1,09,000/-) விற்கப்பட்டு வந்தது.

இன்று கிராமிற்கு மூன்று ரூபாயும் (ரூ.3/-), கிலோவிற்கு மூவாயிரம் ரூபாயும் (ரூ.3000/-) குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று நூற்றி ஆறு ரூபாயாகவும் (ரூ.106/-), ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாயாகவும் (ரூ.1,06,000/-) இருந்து வருகிறது.

google news