Finance
டாப் கியர் போட்ட தங்கம்…அடுத்தடுத்து ஷாக் கொடுத்து வரும் விலை உயர்வு…
இந்திய போன்ற நாடுகளில் சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளிக்கு தனி மவுசு இருந்தே வருகிறது. இந்த இரண்டு வகையான உலோகங்களில் தங்கத்திற்கு என தனிச்சிறப்பு இருந்து தான் வருகிறது வெள்ளியுடன் ஒப்பிடும் போது.
தங்கத்தின் தேவை அதிகரிக்க முக்கிய காரணியாக இருப்பதும் இதுவாகவும் இருக்கிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவையே நாள்தோறும் தங்கத்தின் விலையை தீர்மாணிக்கும் சக்தியாக இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் உள்ளூர் சந்தையில் இருந்து வரும் தேவையும் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் தான் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. நேற்று சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விற்பனை விலை தடாலடியாக உயர்ந்தது.
ஆடி மாதத்தை பொறுத்த வரை ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்டவர்களுக்கு தனிச்சிறப்பு வாய்ந்த மாதமாகவே பார்க்கப்படுகிறது. ஆடி மாதத்தின் துவக்கமான இன்று தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது. ஒரு கிராம் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விற்பனை விலை நேற்றை விட இன்று தொன்னூறு ரூபாய் (ரூ.90/-) அதிகரித்துள்ளது.
இந்த உயர்வினால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ஆராயிரத்து தொல்லாயிரத்து இருபது (ரூ.6920/-) ரூபாயாக உள்ளது. சவரன் ஒன்றிற்கு நேற்றைவிட எழுனூற்றி இருபது ரூபாய் அதிகரித்து (ரூ.720/-) ஐம்பத்தி ஐந்தாயிரத்து முன்னூற்றி அறுபது ரூபாயாக (ரூ.55,360/-) உள்ளது. தங்கத்தின் விலையைப் போல இல்லாமல் வெள்ளியின் விலையில் சிறிய மாற்றமே காணப்பட்டது.
வெள்ளி கிராம் ஒன்றிற்கு நேற்றை விட ஒரு ரூபாய் அதிகரித்து நூறு ரூபாய் ஐம்பது காசுகளாக (ரூ.100.50/-) உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரு லட்சத்து ஐநூறு ரூபாய்க்கு (ரூ. 1,00,500/-) விற்கப்படுகிறது. தமிழ் மாதத் துவக்கத்திலே ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ள தங்கத்தின் விலை விரைவில் இறங்குமுகத்திற்கு வரும் என்பதுவே சாமானியர்களின் எதிர்பார்ப்பாகவே இருக்க