Sikkim: வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பகுதிகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முக்கியமாக சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக தலைநகர் கேங்டாக் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 310ல் நிலச்சரிவு காரணமாக கடுமையான போக்குவரத்து இடைஞ்சல் உருவாகி இருக்கிறது.
இதனால் சிக்கிமில் சுற்றுலா சென்ற பயணிகள் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் அதிகமானோர் அப்பகுதியில் இருந்து வெளியேற முடியாத நிலை உருவாகி இருக்கிறது. லச்சங் கிராமத்தில் சிக்கி இருந்த சுற்றுலா பயணி பலர் மீட்கப்பட்டு மங்கன் பகுதியில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது போக்குவரத்துக்கு ஏதுவாக சாலையை சீர் செய்ய அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். அதே நேரத்தில் ஆங்காங்கே தனியாக சிக்கி இருக்கும் சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு கேங்க்டாக் பகுதிக்கு அழைத்து வரப்படுகின்றனர். சாலை சீர் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப எல்லா ஏற்பாடும் செய்து கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 96 வயது காதலியை கரம் பிடித்த 100 வயது முதியவர்!.. ஒரு சுவாரஸ்ய சம்பவம்!..
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…