Connect with us

Finance

அதிரடி காட்டிய தங்கம்…ஒரே நாளில் ஓஹோ உயர்வு…ஷாக் ஆன சாமானியர்கள்…

Published

on

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதியின் மீதான சுங்கவரியை குறைத்திருந்தார். சர்வதேச பொருளாதார சூழ்நிலையும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புமே தங்கத்தின் விற்பனை விலையை நாள்தோறும் தீர்மானித்து வருகிறது. இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று தங்கத்தின் விற்பனை வரலாற்றில் ஒரே நாளில் இரண்டு முறை குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தது.

அன்றைய தினத்தோடு மட்டும் நின்று விடாமல் அடுத்தடுத்த நாட்களிலும் தங்கத்தின் விற்பனை விலை இறங்குமுகத்தை நோக்கியே சென்றது. இதனால் ஆபரணப்பிரியர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியடைந்து வரும்படியாக இருந்தது. சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரண்த்தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து அசர வைத்தது. தொடர்ச்சியாக வீழ்ச்சியை நோக்கியே தங்கம் விலை இருந்து வந்தது வியப்பை ஏற்படுத்தியே வந்ததால் இந்த நிலை தொடருமா என்கின்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.

silver

silver

ஆனால் இந்த எதிர்பார்ப்புக்களை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக இன்று விற்பனை விலையில் உயர்வை நோக்கி சென்று அதிர வைத்திருக்கிறது. நேற்றை விட இன்று விலை உயர்ந்துள்ள தங்கம் ஒரு கிராம் ஆராயிரத்து ஐனூற்றி பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது (ரூ.6510/-) ,ஒரு சவரன் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஐம்பத்தி இரண்டாயிரத்து என்பது ரூபாயாக உள்ளது (ரூ.52080/-)

இதே போல வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு இன்று என்பத்தி ஒன்பது ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது (ரூ.89/-). ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை என்பத்தி ஒன்பதாயிரம் ரூபாயாக உள்ளது. கடந்த மூன்று நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம் இன்று மீண்டு ம் உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வு மேலும் இருக்காது என தங்க நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

google news