மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட திடீர் தீப்பொறி… அலறிய பயணிகள்… அவசரமாக நிறுத்தப்பட்ட ரயில்…!

0
77

சென்னை மெட்ரோ ரயில் திடீரென்று தீப்பொறி எழுந்ததால் பயணிகள் அலறி அடித்தன.ர் பின்னர் ரயில் நிறுத்தப்பட்டது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகின்றது. மக்கள் எந்தவித சிரமம் இல்லாமல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிய முறையில் செல்வதற்காக மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென்று தீப்பொறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பயணிகள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ரயில் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது. விம்கோ நகர் விமான நிலையம் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரயில் உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் சென்றபோது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது .

ரயில் நிறுத்தியதை தொடர்ந்து ரயிலில் பயணித்த 300 பயணிகளும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல நிற பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்கள் பத்து நிமிடம் தாமதமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை நிற பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை என்று மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here