Cricket
30 ஓவர்கள் விளையாடி 36 ரன்கள்!.. சுனில் கவாஸ்கரின் வேற லெவல் சாதனை!..
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் கிரிக்கெட்டில் முதலில் மும்பை அணிக்காக துவக்க ஆட்டக்காரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்பு 1970 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் துவக்க பேட்ஸ்மனாக செயல்பட்டார். ஆரம்பத்தில் இந்திய அணியில் இவரது செயல்பாடு குறைவாக இருந்தாலும் அதன் பின்பு பல வரலாறுகளை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் இவரின் பெயர் பதிக்கப்பட்டு இருக்கும்.
அதில் அதிக ரன்களை குவித்த சாதனை வீரர். அதிலும் அதிக நூறுகள் அடித்து சாதனைகளை படைத்தவர். மொத்தம் 34 நூறுகள் அடித்து சாதனை படைத்துள்ளார். இது உலக கிரிக்கெட் வரலாற்றில் 20 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சாதனையாக இருந்தது. ஆனால் 2005 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டின் மற்றொரு ஜாம்பவானாக சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை முறியடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் அடித்த முதல் வீரரும் இவர்தான். சுனில் கவாஸ்கர் தற்போது தொலைக்காட்சியில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது கிரிக்கெட் தொடர்பான டிப்ஸ்களையும் கொடுத்து வருகிறார். இவர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் செய்திடாத சிறப்பான சாதனையை செய்திருக்கிறார். அதுவும் உலகக்கோப்பை தொடரில் அரங்கேறி உள்ளது.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான இவர் 1975 ஆம் ஆண்டு இவர் செய்த சாதனை இன்று வரை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த தவறியதில்லை. அப்பொழுதுதான் இந்தியா முதன்முதலில் உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டியிலேயே அன்று பலம் வாய்ந்த அணியாக வலம் வந்த இங்கிலாந்துடன் இந்தியா மோதியது. டாஸ் வெண்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய திட்டமிட்டு இருந்தது. அன்று அனுபவம் இல்லாத இந்திய பவ்லர்களை பிரிட்டிஷ் பேட்ஸ்மேன்கள் அடித்து கிழித்து விட்டனர். அன்றைய காலகட்டத்தில் ஒரு நாள் போட்டி தொடரில் 60 ஓவர்கள் கொன்று நடைபெற்றது.
முதல் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 334 ரன்கள் குவித்தனர். அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணி 335 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்பது மறந்து விட்டது போல. டெஸ்ட் கிரிக்கெட் போலவே 60 ஓவர்களும் விக்கெட்களை விடாமல் ஆடினால் போட்டியை டிரா செய்து விடலாம் என்று நினைத்தார்களோ என்னவோ.? ஆமை வேகத்தில் நகர்ந்தது இந்திய அணியின் ஸ்கோர்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால்.. இந்திய அணிக்காக முதல் பேட்ஸ்மேனாக கிளம் இறங்கிய சுனில் கவாஸ்கர் தான் உலகக்கோப்பை தொடரில் உலக சாதனை படைத்துள்ளார்.
போட்டியின் போது எக்காரணத்தைக் கொண்டும் விக்கெட்டை விட்டு விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் 60 ஓவர்கள் நிலைத்து நின்று களத்தில் ஆடுவது சாதாரண விஷயம் இல்லை. அவர் மொத்தமாக 174 பந்துகள் சந்தித்து வெறும் 36 ரன்கள் மட்டுமே சேகரித்தார். பின்னர் போட்டியின் முடிவில் இங்கிலாந்து 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்களுக்கு அனுபவம் இல்லை என்பதால் அதைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் ஒரு நாள் தொடரில் 174பந்துகள் சந்தித்து 36 ரன்கள் மட்டுமே எடுத்தவரை என்ன செய்யலாம்..? அதன் பின் அவர் செய்த சாதனைகள் பல. பின்னாளில் இந்திய அணியின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் இடத்தை பிடித்தார்.