Categories: Cricketlatest news

இவங்க பிரச்சனை இதுதான்.. இந்திய வீரர்களை சாடிய சுனில் கவாஸ்கர், கபில் தேவ்..!

இந்திய கிரிக்கெட்டில் ஏகப்பட்ட மாற்றங்கள் அரங்கேறி இருக்கின்றன. 70-களில் இருந்த இந்திய கிரிக்கெட்-இன் தற்போதைய நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிப் போயுள்ளது. பி.சி.சி.ஐ. என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கவுன்சில் நிதி நிலைமை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. உலகின் விலை உயர்ந்த கிரிக்கெட் தொடராக இந்திய பிரீமியர் லீக் என்ற ஐ.பி.எல். இங்கு நடைபெற்று வருகிறது.

வீரர்களும் பணக்காரர்கள் ஆகி வருகின்றனர். அதிக வருவாய் கொடுக்கும் மத்திய ஒப்பந்தங்களில் துவங்கி, பல கோடிகளை அள்ளிக்கொடுக்கும் ஐ.பி.எல். தொடர் என இந்திய கிரிக்கெட் வீரர்கள் வருவாய் பலமடங்கு அதிகரித்து வருகிறது. அதிக பணக்காரர்களாக இருக்கும் போதிலும், 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் கபில் தேவ், முன்னேற்றத்துக்கு எப்போதும் இடம் உண்டு என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது..,

Kapil-Dev

“வேறுபாடுகள் நிச்சயம் வந்து போதும், ஆனால் இந்த வீரர்கள் பற்றிய நல்ல விஷயம் என்னவென்றால், அவர்கள் மிகவும் நம்பிக்கையாக உள்ளனர். இவர்களிடம் இருக்கும் குறை, அவர்கள் தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைப்பதில் தான் துவங்குகிறது. இதனை வேறு எப்படி சரியாக சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.”

“ஆனால் அவர்கள் அதிக நம்பிக்கையாக உள்ளனர். அவர்கள் யாரிடமும் எதையும் கேட்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அனுபவம் மிக்கவர்கள் உங்களுக்கு உதவ முடியும் என்று தான் நாங்கள் நினைக்கின்றோம். சில சமயங்களில் அதிக பணம் கிடைக்கும் போது, ஆணவம் ஏற்படும். இந்த கிரிக்கெட் வீரர்கள், தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கின்றனர். இது தான் வித்தியாசமே.”

Kapil-Dev-Sunil-Gavaskar-1

“நிறைய கிரிக்கெட் வீரர்களுக்கு உதவி வேண்டும் என்றே நான் கூறுவேன். சுனில் கவாஸ்கர் இருக்கும் போது, அவரிடம் ஏன் பேச கூடாது? எங்கிருந்து, நான் தான் என்ற அகங்காரம் வருகிறது? அகங்காரமே தேவையில்லை. நாம் சிறப்பானவர் தான் என்று அவர்கள் உணர்கின்றார்கள். அவர்கள் சிறப்பானவர்கள் என்ற போதிலும், கிரிக்கெட்டில் 50 சீசன்களை பார்த்தவர்களிடம் இருந்து உதவி பெறுவது அவர்களுக்கு கூடுதல் பலன் அளிக்கலாம். சில சமயங்களில் அவற்றை கேட்டுக் கொள்வது உங்கள் மன நிலையை மாற்றலாம்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் மரியாதைக்குரிய வீரர்களில் ஒருவர், முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர், தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் தன்னிடம் அறிவுரை கேட்க வருவதில்லை என்று சமீபத்தில் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது..,

“யாரும் வந்ததில்லை. ராகுல் டிராவிட், சச்சின் டென்டுல்கர், வி.வி.எஸ். லக்‌ஷமன் தொடர்ச்சியாக என்னிடம் ஆலோசனை கேட்பார்கள். அவர்கள் ஏதேனும் பிரச்சனையுடன் வருவார்கள், அவர்களிடம் நாம் எதிர்கொண்ட அனுபவம் எதையேனும் கூறலாம். இவ்வாறு செய்வதில் எனக்கு அகங்காரம் இருந்ததே இல்லை, அவர்களிடம் நானாக சென்று பேச முடியும். ஆனால் ராகுல் டிராவிட் மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகியோர் பயிற்சியாளர்களாக உள்ளனர். சில சமயங்களில் அவர்களிடம் பேசும் போது, அதிகப்படியான விவரங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உண்டு,” என்று தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

1 hour ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

5 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago