நடப்பு நிதியாண்டில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (என்பிஎஃப்சி) ஒழுங்கமைக்கப்பட்ட தங்க நகைக் கடன்கள் ரூ.10 லட்சம் கோடியை இந்தியாவில் தாண்டும் என்றும், இது 2027 மார்ச் மாதத்திற்குள் 15 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என அறிக்கை ஒன்று சொல்லியுள்ளது.
ரேட்டிங் நிறுவனமான ஐசிஆர்ஏ தங்க நகைகள் சார்ந்த விவசாயக் கடன்களால் வங்கிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. (பிஎஸ்பிஸ்) மார்ச் 2024 இல் ஒட்டுமொத்த தங்கக் கடன்களில் சுமார் 63 சதவீதத்தை பொதுத்துறை வங்கிகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 மார்ச்சில் 54 சதவீதமாக இருந்து வந்த இது. அதே நேரத்தில் என்பிஎஃப்சி மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகள் இந்த காலகட்டத்தில் சமமான அளவிலேயே இருப்பதாகவும் நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
என்பிஎஃப்சிகள் சில்லறை தங்கக் கடன்களில் யெஃப்ஒய் 25 இல் 17-19 சதவீதமாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த தகவல்கள் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீப காலங்களில், என்பிஎஃப்சி தங்கக் கடன்களின் அசுர வளர்ச்சி, மைக்ரோ-ஃபைனான்ஸ், பாதுகாப்பற்ற வணிகம் அல்லது தனிநபர் கடன்கள் போன்ற பிற கடன் தயாரிப்புகளால் இந்த வளர்ச்சி தடுக்க முடியாத அளவிற்கு இருப்பதாகவும், அதனால் மக்களின் கடன் வாங்கும் தன்மையும் உயர்ந்திருப்பதையும் காண முடிவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட தங்கத் திட்டங்களின் சந்தையானது யெஃப் ஒய்20-யெஃப் ஒய்24 காலக்கட்டத்தில் 25 சதவிகித (சிஏஜிஆர்) ஒட்டு மொத்தமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வங்கிகளால் இந்த கடன்கள் 26 சதவிகிதம் அதிக சிஏஜிஆர் ஆக உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில்என்பிஎஃப்சிக்கள் தங்கள் கடன்களின் அளவை இந்த காலகட்டத்தில் 18% ஆக உயர்த்தியுள்ளது.
வங்கித் தங்கக் கடன்களின் வளர்ச்சியானது தங்க நகைகளால் ஆதரிக்கப்படும் விவசாயக் கடன்களால் வளர்ச்சியடைந்து இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன, இது யெஃப் ஒய்20- யெஃப் ஒய்24 இல் 26 சதவிகிதம் சிஏஜிஆர் இல் வளர்ந்தது, அதே நேரத்தில் வங்கிகளின் சில்லறை தங்கக் கடன்கள் 32 சதவீத உயர்வை எட்டியிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…