இலங்கை தொடருக்கு முன்பாக இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஜிம்பாப்வே தொடருக்குப் பின் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. டி20 போட்டிகளிலிருந்து ரோஹித் ஓய்வுபெற்றிருக்கும் நிலையில், அவருக்குப் பின் ஹர்திக் பாண்டியாதான் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஒவ்வொரு தொடரின் போதும் ஹர்திக் விளையாடுவாரா என்கிற கேள்வி எழுவதுண்டு. இந்திய அணிக்கு நிலையான கேப்டன் வேண்டும் என்கிற எண்ணத்தில் ஹர்திக்குக்குப் பதில் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மற்றும் பிசிசிஐ நிர்வாகம் பரிசீலனை செய்வதாகத் தெரிகிறது.
2026 டி20 உலகக்கோப்பை தொடர் வரை சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஹர்திக் பாண்டியாவின் வொர்க் லோடு பற்றிய விவாதம் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, அடுத்தடுத்து நடக்கும் இரண்டு தொடர்களில் ஹர்திக் பாண்டியா விளையாடியது அபூர்வமாகவே நடந்திருக்கிறது.
இதுகுறித்து ஹர்திக் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரிடமுமே பிசிசிஐ நிர்வாகம் பேசியிருக்கிறது. ஆனால், இதுபற்றிய இறுதி முடிவு தேர்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட இருக்கிறது. அதேபோல், ஒருநாள் தொடரில் இருந்து ரோஹித் ஷர்மா பிரேக் கேட்டிருப்பதால் இந்திய ஒருநாள் அணிக்கு யாரை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. கே.எல்.ராகுல் இந்தப் போட்டியில் முந்துவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…