முன்பு தமிழகத்தின் பாஜக தலைவராக தமிழிசை சவுந்தர்ராஜன் இருந்தார். அவருக்கு பின் எல்.முருகன் வந்தார். அவருக்கு பின் கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலையை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து பாஜக தலைவர் ஆக்கினார்கள். இது ஏற்கனவே பாஜகவில் இருந்த பலருக்கும் பிடிக்கவில்லை.
குறிப்பாக எஸ்.வி.சேகர், தமிழிசை, வானதி சீனிவாசன் போன்றவர்களுக்கு இதில் அதிருப்தி இருந்தது. எனவே, தமிழிசை சவுந்தர்ராஜனை ஆளுநர் ஆக்கி ஆந்திரா அனுப்பி வைத்தார்கள். வானதி சீனிவாசனுக்கு கோவையில் சீட் கொடுத்து எம்.எல்.ஏ ஆக்கினார்கள்.
இதில், எஸ்.வி.சேகர் மட்டும் அண்ணாமலையின் செயல்பாடுகளை பேட்டியிலும், சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். பல சமயங்களில் நக்கலடித்தும் வந்தார். தமிழக பாஜகவில் ரவுடிகளுக்கு பதவி கொடுத்து கட்சியை கெடுத்துவிட்டார் என்கிற புகார் அண்ணாமலை மீது இருக்கிறது.
இந்த கருத்தைத்தான் சமீபத்தில் தமிழிசையும் சொல்லி இருந்தார். அதிமுக தலைவர்களை பற்றி அண்ணாமலை வாய் துடுக்காக பேசியதால் அந்த கட்சி பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக எஸ்.வி.சேகர், தமிழிசை ஆகியோர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் போனதற்கு அண்ணாமலையின் செயல்பாடுகள்தான் காரணம் என எஸ்.வி.சேகர் தொடர்ந்து சொல்லி வருகிறார். இந்நிலையில், நேற்று கோவை விமானநிலையத்தில் இருந்து அண்ணாமலை கிளம்பிபோது நிருபர்கள் அவரிடம் பேச முயன்றனர். அப்போது ‘இனிமேல் நான் விமான நிலையத்தில் பேட்டி கொடுக்க மாட்டேன். பாஜக அலுவகத்தில் மட்டுமே செய்தியாளர்களை சந்திப்பேன். பாத்ரூம் போகும் போதெல்லாம் யாரும் பேட்டி கொடுக்க மாட்டார்கள்’ என அண்ணாமலை சொன்னார்.
இதைத்தொடர்ந்து எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘தலிவர் இனிமே பாத் ரூம் போக வரும் போதெல்லாம் பேட்டி குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரே ஏன்?.. முக்கி முக்கி பதில் சொல்ல முடியலையாம். அவர் கஷ்டம் அவருக்கு’ என நக்கலடித்திருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…