இருக்கும் இடத்திற்கே உணவு, ஸ்விக்கியில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடி வந்து விடுகிறது சாப்பாடு. டெக்னாலஜிகளின் வேகத்தால் அதிகமாக வீட்டில் சமைக்கத் தேவையில்லை என்ற முறை அமலுக்கு வந்து விட்டது.
ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்கள் உணவு டெலிவரி பணிகளை செய்து வருகின்றன இந்தியாவில். தங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக சமீபத்தில் சீல் ஒன்றை வெளியிட்டுள்ளதது ஸ்விக்கி.
புனே நகரத்தில் ‘ஸ்விக்கி சீல்’ என்ற நவீன அம்சம் முதன் முதலாக கொண்டு வரப்பட்டுள்ளது ஸ்விகி நிறுவனத்தால். இந்த நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் அந்நிறுவனம் செயல்படக்கூடிய 650 நகரங்களிலும் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வரும் என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்திருந்தது.
இது குறித்து ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், உணவுகளை ஆர்டர் செய்து வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு இந்த உணவு சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறது, மேலும் உணவு தர நிர்ணயத்திற்கு ஏற்ற முறையில் இது தயாரிக்கப்படுகிறது என்ற நம்பிக்கையை பெற வேண்டும் எனவே தான் ஸ்விக்கி என்ற ஒரு புதிய பேட்ஜை தங்களது நிறுவனம் கொண்டு வந்திருக்கிறது என சொல்லியுள்ளது.
உணவு டெலிவரியின் ஒரு பகுதியாக உணவு தரத்தை மேம்படுத்தவும், சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது மற்றும் டெலிவரி செய்யப்படுகிறது என்பதை உறுதி செய்யவும் ‘ஸ்விக்கி சீல்’ என்ற ஒரு புதிய அம்சத்தை உருவாக்கியிருக்கிறது இந்த நிறுவனம். இதனால் வாடிக்கையாளர்களின் உணவு தரத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்க செய்யப்படுகிறது.
தற்போது ஸ்விக்கி நிறுவனம் வேறு ஒரு வசதியை தங்களது சேவையில் வழங்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இனி ஸ்விக்கி மூலம் புத்தகங்களையும் பெறலாம் என்பது தான் அந்த புதிய வசதி. வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸ் இதனை அறிமுகப்படுத்துகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…