Connect with us

Cricket

T20 World Cup: அடுத்த ரிவெஞ்சுக்கு தயாராகும் இந்தியா! #INDVsENG

Published

on

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி கயானாவில் ஜூன் 27-ம் தேதி நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பெற்றிருக்கும் தென்னாப்பிரிக்க அணியும், பெரும் எழுச்சி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. இது டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 6 மணிக்குத் தொடங்குகிறது.

அதேபோல், கயானா புராவிடன்ஸ் மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை இந்திய அணி எதிர்க்கொள்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோல்விக்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி பழிவாங்கியது.

இந்தநிலையில், 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்கு இந்த அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி பழிதீர்க்குமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 2022 டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின.

அடிலெய்டு மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இந்தியா நிர்ணயித்த இந்த இலக்கை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களில் எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகுலின் முதல் அரசியலமைப்புப் பதவி.. எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் முக்கியத்துவம்!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cricket

இந்திய அணிக்கு உலக கோப்பைகள் கொடுத்த முக்கிய கேட்சுகள்… கபில்தேவ் முதல் சூர்யகுமார் வரை…

Published

on

By

ஐசிசி உலக கோப்பையை இந்திய அணி 17 வருடம் கழித்து பெற்று இருக்கிறது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. தோனி தலைமையிலான வெற்றிக்கு பின்னர் ரோஹித் இந்தியாவிற்கு உலக கோப்பையை பெற்று கொடுத்து இருக்கிறார்.

இவ்விரண்டு கோப்பைகளுக்கு முன்னர் இந்தியா கபில்தேவ் தலைமையிலான அணி இருந்த போது உலக கோப்பையை பெற்றது. மூன்று உலக கோப்பைகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? கிட்டத்தட்ட இந்திய அணி தலை தூக்கி கொண்டு இருந்த காலகட்டம் அது. கவாஸ்கரை இறக்கிவிட்டு கபில்தேவ் கேப்டனாக நியமிக்கப்படுகிறார்.

ரொம்பவே ஏளனமாக பார்க்கப்பட்ட இந்திய அணி இங்கிலாந்து சென்றது. இந்த முறையும் ஒன்னுமே இல்லாமல் தான் வருவார்கள் என கிசுகிசுத்தனர். ஆனால் அவர்கள் நம்பிக்கையை பொய்யாக்கி ஒவ்வொரு ஜாம்பவான் அணியை தட்டி தூக்கி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அந்த காலக்கட்டத்தில் இரண்டு கோப்பைகளை வைத்து இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய இந்திய அணி 183 இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்தனர்.

அடுத்து இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த ஆட்டமிழந்தாலும் விவியன் ரிச்சர்ட் களத்தில் இருந்தார். மதன்லால் வீசிய அந்த பந்தை ரிச்சர்ட் தூக்கி அடிக்க அதை பின்னாலே ஓடிச்சென்ற கபில்தேவ் லாவகமாக பிடித்தார். அந்த கேட்ச் போட்டியை மாற்றியது. இந்தியாவிற்கு முதல் உலக கோப்பை கிடைக்க காரணமானது.

ஆனால் அந்த உலக கோப்பைக்கு பின்னர் இந்தியாவிற்கு பெரிய கோப்பை எதுவும் கிடைக்கவே இல்லை. பல ஜாம்பவான்கள் இருந்தாலும் உலக கோப்பையை ருசிக்க முடியாமல் போனது. 2007ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையில் விளையாடியது.

ஒவ்வொரு போட்டியிலும் சரியான கணிப்பில் இறங்கி பைனல் வரை சென்றது. இறுதியில் பாகிஸ்தானை சந்தித்தது. ஐந்து விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் இந்தியா பெற்றது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் பாகிஸ்தான் இறங்கியது. 

18 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் சேர்த்து ஒன்பது விக்கெட்களை பாகிஸ்தான் அணி இழந்து இருந்தது. கடைசி ஓவருக்கு ஜோகிந்தர் சர்மா கையில் பந்தை கொடுத்து தோனி வீச சொல்ல இது பலருக்கு ஆச்சரியத்தினை கொடுத்தது. ஆனால் அதற்கேற்ப அவர் வீசிய மூன்றாவது பந்தை மிஸ்பா அடிக்க ஸ்ரீசாந்த் கையில் லாவகமாக அமர்ந்தது.

2024 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி வெல்ல 30 பாலுக்கு 30 ரன்கள் மட்டுமே தேவை இருந்த நிலையில் ஹர்திக் வீசிய பந்தை டேவிட் மில்லர் அடிக்க சிக்ஸ் கோட்டுக்குள் விழுந்த பந்தை சூர்யகுமார் யாதவ் பிடித்து வெளியில் எறிந்துவிட்டு பிடித்த கேட்ச் ஆட்டத்தினையே மாற்றி இந்தியாவுக்கு கப்பை பெற்று தந்தது. 

Continue Reading

Cricket

ரெட் Ball-யும் முடிச்சிடு – கோலிக்கு டார்கெட் கொடுத்த டிராவிட்

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடைசி நாளில் ராகுல் டிராவிட் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு டார்கெட் கொடுத்த சம்பவம் அம்பலமாகி இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடரை வெற்றி பெற்றதும் இந்திய அணியின் விராட் கோலியிடம் ராகுல் டிராவிட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-ஐ வெற்றி பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பான வீடியோ சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி.யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. அதில், “விராட் கோலியிடம் ராகுல் டிராவிட் மூன்று வெள்ளைகளும் டிக் செய்யப்பட்டு விட்டன, ஒரு சிவப்பு மட்டும்தான் மீதமுள்ளது. அதையும் டிக் செய்துவிடு,” என்று கூறும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்டவைகளை வென்றுள்ள விராட் கோலி இதுவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை மட்டும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தனது இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. ராகுல் டிராவிட் தனது இந்திய தலைமை பயிற்சியாளர் பதவியை மாபெரும் வெற்றியுடன் விடைபெறுகிறார்.

முன்னதாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 உலகக் கோப்பை தொடரை மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. இதுதவிர ஐ.சி.சி. நடத்திய ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலும், 2011 ஆம் ஆண்டு மகேந்திர சிங் டோனி தலைமையிலும் வெற்றி பெற்று இருக்கிறது.

இதே போன்று 2002 மற்றும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

Continue Reading

Cricket

யாராவது வேலை இருந்தா சொல்லுங்கப்பா.. ராகுல் டிராவிட்

Published

on

டி20 உலகக் கோப்பை 2024 தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதிவியில் இருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெறுகிறார். உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதன் மூலம் வெற்றிகர தொடர் மூலம் இந்திய தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெறுகிறார்.

இறுதிப் போட்டிக்கு பிறகு ராகுல் டிராவிட் செய்தியாளர்களிடையே உரையாடும் போது, அடுத்த வாரம் துவங்கி எனக்கு எந்த வேலையும் இல்லை என்று நக்கலாக தெரிவித்தார். மேலும் தங்களுக்கு தெரிந்து ஏதேனும் வேலைவாய்ப்பு இருந்தால் தகவல் கொடுங்கள் என்றும் தெரிவித்தார்.

மாபெரும் வெற்றியை கடந்து செல்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ராகுல் டிராவிட், “ஆம், என்னால் முடியும். அடுத்த வாரம் துவங்கி எனது வாழ்க்கை ஒரே மாதிரி தான் இருக்கும். எனக்கு எந்த வேலையும் இருக்காது. அது மட்டும் வித்தியாசமாக இருக்கும். உங்களுக்கு தெரிந்து வேறு ஏதும் வேலை இருக்கிறதா?,” என்று தெரிவித்தார்.

ராகுல் டிராவிட் ஓய்வு பெறுவதை ஒட்டி, இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளரை நியமிக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போதைய தகவல்களின் படி இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது. எனினும், இது குறித்து இதுவரை எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Continue Reading

Cricket

முதலாவது டெஸ்ட்: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Published

on

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 603 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணிக்கு துவக்க வீராங்கனைகளான ஷஃபாளி வெர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி அபாரமான துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 205 மற்றும் 149 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஷுபா சதீஷ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பிறகு வந்த ஜமெமியா ரோட்ரிக்ஸ் 55 ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 69 ரன்களையும் அடுத்து வந்த ரிச்சா கோஷ் 86 ரன்களையும் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் டெல்மி டக்கர் 2 விக்கெட்டுகளையும் நடைன் டி கிலெர்க், துமி ஷெகுன் மற்றும் நான்குலெகோ லாபா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியா அபார பந்துவீச்சு:

அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 266 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அந்த அணி சார்பில் கேப்டன் லாரா 20 ரன்களையும், அனெக் போஷ் 39 ரன்களையும் சேர்த்தனர். அடுத்து வந்த சூன் லஸ் 65 ரன்களையும், மரிசேன் கப் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் தவிர நடைன் டி கிலெர்க் மட்டுமே 39 ரன்களை அடித்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்னே ரானா 8 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மிக குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆனதை தொடர்ந்து இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாளோ ஆன் கொடுத்தது.

தென் ஆப்பிரிக்கா நிதானம்:

அதன்படி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிதானமாக ஆடியது. அந்த அணியின் துவக்க வீராங்கனையும், கேப்டனுமான லாரா 122 ரன்களை விளாசினார். அடுத்து வந்த சுன் லஸ் 109 ரன்களை விளாசினார். இவர்கள் தவிர மரிசேன் கப் 31 ரன்களையும், டி கிலெர்க் 61 ரன்களையும் சேர்த்தனர்.

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 373 ரன்களை சேர்த்து இருந்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்னே ரானா, தீப்தி ஷர்மா மற்றும் ராஜேஷ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பூஜா வஸ்தராக்கர், ஷஃபாளி வெர்மா மற்றும் ஹர்மன்பிரீத் கௌர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 37 எனும் மிக எளிய இலக்கை துரத்தியது. இந்திய அணிக்கு துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஷுபா சதீஷ் மற்றும் ஷஃபாளி வெர்மா முறையே 13 மற்றும் 24 ரன்களை எடுத்தனர். இதன் மூலம் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இதைத் தொடர்ந்து இரு அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி சென்னையில் ஜூலை 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Continue Reading

Cricket

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்குள் மீண்டும் தினேஷ் கார்த்திக்… வெளியான ஆச்சரிய அறிவிப்பு..

Published

on

By

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை புதிய அவதாரத்தில் மீண்டும் டீமுக்குள் எடுத்து இருப்பதாக அணி நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கை பேட்டிங் கோச் மற்றும் மெண்டராக மீண்டும் அணிக்கு வரவேற்பதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நிர்வாகம் தங்களுடைய எக்ஸ் கணக்கில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நீங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஒரு மனிதனை இருந்து வெளியேற்றலாம். ஆனால் ஒரு மனிதனிடம் இருந்து கிரிக்கெட்டை வெளியேற்ற முடியாது. 12வது மேனாக இருக்கும் எங்கள் ஆர்மி தினேஷ் கார்த்திக்கை வரவேற்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தினேஷ்கார்த்திக் பேசி இருக்கும் வீடியோவில், கடந்த மூன்று வருடங்களாக எனக்கு பெங்களூர் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்தனர். நான் சாதிக்க நினைத்ததை செய்ய துணையாக நின்றனர். ஒவ்வொரு கிரிக்கெட்டர்களுக்கும் இப்படி ஒரு ரசிகர்கள் வேண்டும். நான் உலக கோப்பைக்காக நியூயார்க் சென்ற போது நான் சந்தித்த முதல் நபர் ஆர்சிபி ஜெர்சி அணிந்து வந்து என்னிடம் ஆட்டோகிராப் வாங்கினார். அது ஆர்சிபியின் பவர் மற்றும் புகழை குறிக்கிறது. தற்போது நான் ஆர்சிபியுடன் பேட்டிங் கோச்சாக இணைந்து இருக்கிறேன்.

இதுவரை ஆர்சிபியை கோப்பையை எட்டுவதில் தவறவிட்டு இருக்கிறது. வீரராக விரும்பியதை அணியின் கோச்சாக செய்வேன். ஆர்சிபியை விரைவில் கப்பை தட்டும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். ஐபிஎல்லில் நடப்பு ஆண்டுடன் விடைப்பெற்றார் தினேஷ்கார்த்திக். 

இதுவரை 17 சீசன் ஐபிஎல் விளையாடி இருக்கும் தினேஷ் கார்த்திக், 257 போட்டிகளில் விளையாடி 4,842 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில், 22 அரைசதங்களும் அடங்கும். மேலும், 2013ம் ஆண்டு மும்பை கப்பை வென்ற போது அவர் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RCB ட்வீட்டை காண: https://x.com/RCBTweets/status/1807641302823207208

 

Continue Reading

Trending

Exit mobile version