latest news
இவ்வளவு உயரமா முருகன் சிலை!…இது எங்க நம்ம ஊர்லயா?…
தமிழ் கடவுள் என்று பக்தியோடு அழைக்கப்பட்டு வழிபட்டு வரப்படுபவர் முருகப் பெருமான். ஆறுபடை வீடுகளுக்கு பக்தியுடன் சென்று முருகக் கடவுளை வழிபட்டு வருகின்றனர் பக்தர்கள். உலகிலேயே அதிக உயரம் கொண்ட முருகப் பெருமான் சிலை என சொல்லப்படுவது மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள முருகர் சிலை. இதன் உயரம் 140அடி என கணக்கிடப்பட்டுள்ளது.
மலேசியாவிற்கு சென்று இந்த கோவிலை வழிபட்டு வருபவர்களும் ஏரளமாக இருக்கின்றார்கள்.2006ம் ஆண்டு திருவாரூர் தியாகராஜன் என்ற சிற்பி குழுவினரால் தான் இந்த சிலை வடிக்கப்பட்டது. ஆனால் இந்த சிலையை விட உயரமான முருகப்பெருமானின் சிலை தமிழ் நாட்டில் இருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ளது இந்தக் கோவில். சேலம் மாவட்டப் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் முத்து மலை முருகன் கோவில்.
இந்தக் கோவிலில் வடிக்கப்பட்டிருக்கும் முருகன் சிலை தான் இப்போது உலகின் மிக உயரமானது என சொல்லப்படுகிறது. கோலாலம்பூர் கோவில் சிலையை வடித்த சிற்பி திருவாரூர் தியாகராஜன் குழுவினர் தான் இந்த சிலையையும் வடித்துள்ளார்.
ஆறுபடை வீடுகளிலிருந்து எடுக்கப்பட்ட மண் மூலம் தான் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சிலை பஞ்ச வர்ண நிறங்களால் வர்ணம் பூசப்பட்டிருக்கிறது. பின்னால் மலை, அதன் முன்னர் எழில்மிகு தோற்றம் கொண்டுள்ளது இந்த கோவிலில் வடிவமைக்கப்பட்டுள்ள சிலை.
முத்துமலை முருகன் கோவிலுக்கு பின்னால் தெரியும் மலையில் கூட மற்றுமொரு கோவில் அமைந்துள்ளதாம். மலையேறிச் சென்று அந்த மலைக்கோவிலின் தெய்வத்தையும் வழிபட்டு வருகின்றார்கள் இங்குள்ள பக்தர்கள். முத்துமாலை முருகன் கோவிலில் உள்ள முருகப் பெருமானின் 146 அடி உயர சிலையை கண்டு ரசிக்க லிஃப்ட் வசதியும் செய்யப்பட்டிருக்கிறதாம்.