latest news
ஜூலை 10 பொது விடுமுறை… சற்று முன் தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு வருகிற ஜூலை 10ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் வெளியாகிவிட்டது. தமிழ்நாடு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய புகழேந்தி திடீரென்று உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதி தற்போது காலியாக இருக்கின்றது.
இதனால் வருகிற ஜூலை 10ஆம் தேதி விக்ரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பல கட்சிகளை சேர்ந்த நபர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் தொடர்ந்து இணைப்பு மனு தாக்கல் செய்தார்கள். திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் அணியூர் சிவா போட்டியிடுகின்றார். மேலும் பாஜக சார்பில் சி அன்புமணி போட்டியிடுகின்றார்.
நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா போட்டியிடுகின்றார். தொடர்ந்து அந்த தொகுதியில் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அந்தந்த கட்சிகளை ஆதரித்து தலைவர்கள் பலரும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. மேலும் வருகிற 8-ம் தேதி 6:00 மணிக்குள் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தையும் முடிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.