latest news
மூளையை தின்னும் அமீபா… இதெல்லாம் பாலோ பண்ணுங்க… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…!
கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவுக்கு மூன்று பேர் உயிரிழந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அரசு சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது .
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா என்ற புதிய வகை நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தமிழகத்திலும் பரவ வாய்ப்பு இருக்கும் அபாயம் இருப்பதால் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது “தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். குளங்கள் ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற மூளையை தின்னும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்து வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இடைத்தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் அறிகுறிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை கண்டறிய ஆலோசனை செய்ய வேண்டும். மேலும் சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை உடனடியாக மூன்றாம் நிலை பராமரிப்பு மையங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.