Connect with us

latest news

யாருக்கு ஏற்றம்? – தமிழிசை கேள்வி…வேற ஆளேயில்லையா? …திமுகவை விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

Published

on

Tamilisai Duraimurugan

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அமைச்சரவையில் மாற்றம், மற்றும் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு தனது பாணியில் பதிலளித்தார்.

மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என பதிலளித்திருந்த நிலையில், இதுகுறித்து கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர் தமிழிசை செளந்தரராஜன்,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மூத்த நிர்வாகிகள் இருக்கும்போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா?, என கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் கூறிய மாற்றம் துரை முருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும் எனவும் யார் ஏமாறப்போகிறார்கள் என்பது அமைச்சரவையின் மாற்றத்தின் போது தெரியும் என  கருத்து கூறியிருக்கிறார்.

Jeyakumar Udhayanidhi

Jeyakumar Udhayanidhi

முதலமைச்சரின் அமைச்சரவை குறித்த பதில்ளை விமர்சித்துள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்ணாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக சங்கர மடம் இல்லை என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சொல்லியதை சுட்டிக் காட்டி பேசினார். அதோடு திமுகவில் கடுமையாக உழைத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி இல்லையா? என கேள்வியும் எழுப்பியிருக்கிறார் .

துணை முதல்வராக உதயநிதியை தவிர வேறு எவருக்கும் தகுதி இல்லையா? எனவும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உதயநிதி துணை முதல்வர் என கொஞ்சம் கொஞ்சமாக கருத்தை விதைத்தனர் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை விமர்சித்துள்ளார். அதோடு தமிழக மீனவர்கள் தொடர்ந்துள்ள பாதிக்கப்பட்டு வருகின்றனர், திமுக அரசுக்கு அதுபற்றி கவலையில்லை எனவும் ஜெயக்குமார் பேசியிருக்கிறார்.

google news