நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி, கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். கட்சித் தலைவராக மாறிய பின்னர் விஜய் நடிப்பில் வெளிவர உள்ள முதல் படம் இது என்பதால், நாளை வெளிவர உள்ள “கோட்” படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின் போது விஜய் மாநாட்டு இடத்திற்கு அனுமதி கொடுப்பதில் என்ன பயம் இருக்கிறது? என கேள்வி எழுப்பியிருக்கிறார் தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக தலைவருமான தமிழிசை செளந்தர்ராஜன்.
கார் பந்தயத்தை இவ்வளவு விரைவாக நடத்த முடிந்த தமிழக அரசு, விஜய் கட்சி மாநாட்டு இடத்திற்கு அனுமதி கொடுப்பதில் ஏன் தயக்கம் காட்டுகிறது? என கேள்வி எழுப்பினார்.
அதிகாரிகள் விடுப்பில் சென்றுள்ளதால் மாநாடு நடைபெறும் இடத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் எனக்கூறுவது ஏற்கும் படி உள்ளதா? எனவும் வினாவினார். கட்சியின் கொள்கை பற்றி விஜய் இன்னும் தெரியப்படுத்தவில்லை.
புதிதாக கட்சி துவங்கியவர்கள் மாநாடு நடத்துவதில் ஆர்வம் காட்டுவார்கள். அதற்கான அனுமதி வழங்க அரசு ஏன் பயப்படுகிறது? என விஜய் கட்சி மாநாட்டிற்கு ஆதரவாக கேள்வி எழுப்பினார். தான் இப்படி கேள்வி எழுப்பியதால் விஜய் கட்சிக்கு ஆதரவு இல்லை என்பதையும் குறிப்பிட்ட தமிழிசை செளந்தர்ராஜன், விஜய் மாநாடு நடத்த உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் சொன்னார்.
இடத்தை கொடுத்தால் மடத்தை பிடித்து விடுவாரா விஜய், பரீட்சையில் கேள்வித்தாள் கொடுத்து பதில் கேட்பது போல விஜயிடம் அதிகமாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது எனவும் தமிழிசை சொன்னார்.
களத்தில் யார் சிறந்தவர் யார்? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். இந்த சமுதாயம் இன்னும் ஆண் சமுதாயமாகத்தான் இருக்கிறது என அரசியலில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தார். அதே போல பெண்கள் உரிய பாதுகாப்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டினையும் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருக்கிறார் தமிழிசை செளந்தர்ராஜன்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…