Connect with us

latest news

குழிபறிக்க நினைத்தது நடக்க வில்லை…திருமா மீது தமிழிசை காட்டம்…

Published

on

Tamilisai

மது ஒழிப்பு மாநாடு நடத்தபோகிறேன் என சொன்ன திருமாவளவன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்த பின்னர் எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என சொல்லியிருக்கிறார். மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்காதவர்கள், தேசிய மது விலக்கு கொள்கையை ஏற்பீர்களா? என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்தும் பாராளுமன்றத்தில் தேசிய மதுவிலக்கு பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் என்றாவது பேசியதுண்டா? என கேள்வி எழுப்பிய தமிழிசை, விடுதலை சிறுத்தைகளுக்கு இப்போது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள், இவர்கள் ஏன் பாராளுமன்றத்தில் தேசிய மதுவிலக்கு பற்றை இது வரை ஏன் பேசவில்லை என்றும் திருமாவளவன் மீது தனது அடுக்கடுக்கான குற்றச்சாட்டினை முன் வைத்திருக்கிறார் தமிழிசை செளந்தரராஜன்.

அதோடு அப்பட்டமான உங்களது அரசியல் நாடகம் அம்பலமாகி விட்டது. திமுக கூட்டணியில் அஸ்திவாரத்தில் குழி பரித்து அசைத்து பார்க்க நினைத்தீர்கள்,

Thirumavalavan

Thirumavalavan

அது பலிக்கவில்லை என்றதும் எல்லாவற்றையும் மடை மாற்றி மத்திய அரசு பக்கம் திருப்பி விடுகிறீர்கள் என திருமாவளவனை தனது விமர்சனத்தின் மூலம் கடுமையாக தாக்கியிருக்கிறார் தமிழிசை.

இது போலத் தான் புதிய கல்விக்கொள்கையின் மீதும், நீட் தேர்வு விஷயத்திலும் இதையே தான் திருமாவளவன் செய்ததாக குற்றம் சாட்டினார் தமிழிசை. திருமாவளவனாலும், அவரது கூட்டணியாலும் இப்போது மது விலக்கை கொண்டு வர முடியாது என்றதுமே இப்படி மடையை மாற்றுகிறார் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி தமிழிசை செளந்தரராஜன் தனது விமர்சனத்தையும், குற்றச்சாட்டினையும் முன் வைத்திருக்கிறார்.

google news