Connect with us

latest news

அமித்ஷா என்ன திட்டினார்?!.. செய்தியாளர்கள் கேட்ட கேள்வி.. தமிழிசையின் பதில் இதுதான்!…

Published

on

tamilisai

ஹைதராபாத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை எச்சரிக்கும் வகையில் கோபமாக பேசிய சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் அண்ணாமலை பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டபின் அந்த கட்சியில் குற்றச்செயல்களில் தொடர்புடைய பலரையும் அவர் சேர்த்ததாக ஒரு புகார் உண்டு. அதோடு, அண்ணாமலையின் செயல்பாடுகள் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுக்கும் பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. ஒருபக்கம், ஆளுனர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தமிழக அரசியல் களத்திற்கு வந்த தமிழிசை அண்ணாமலையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அதிமுக – பாஜக கூட்டணியோடு போட்டி போட்டிருந்தால் 20 இடத்திற்கும் மேல் வெற்றி பெற்றிருக்கலாம் என சொன்னார்.

மேலும், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தன்னை டிவிட்டர் வார் ரூமில் கடுமையாக பேசுவதாக கோபப்பட்ட தமிழிசை அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் எனவும் சொன்னார். இதைத்தொடர்ந்தே அமித்ஷா அவரிடம் கடுமை காட்டி இருக்கிறார். அமித்ஷா நடந்து கொண்டது தவறு.. தமிழிசை பாஜகவிலிருந்து விலக வேண்டும் எனவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹைதராபாத்திலிருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார் தமிழிசை. வழக்கமான செய்தியாளர்களை சந்திக்கும் இன்று யாரிடமும் பேசவில்லை. ஆனாலும் ‘எல்லாம் ஓகேவா?’ என செய்திகாளர்கள் கேட்டதற்கு ‘ஓகேதான்’ என கை விரலை உயர்த்தி காட்டி சிரித்துகொண்டே சென்றுவிட்டார்.

google news