latest news
அரசு பள்ளிகளில் ஆண்டு விழா… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!
அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவது குறித்த முடிவை மாநில அரசே எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வரும் ஆண்டு விழாவை போலவே அரசு பள்ளியிலும் ஆண்டுதோறும் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்கான நிதியை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு அந்தந்த பள்ளிகளின் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 15 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.
இதனை கேட்ட நீதிபதிகள் தனியார் பள்ளிகளை போலவே அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்துவது என்பது சாத்தியமற்றது. பள்ளி ஆண்டு விழா நிதியை உயர்த்துவது குறித்து மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார். மேலும் தற்போதுள்ள மாணவர்கள் பல வார்த்தைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். வேற லெவல், மாஸ் போன்ற வார்த்தைகள் மாணவர்களிடையே புழக்கத்தில் இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.